அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சிறு தொழில்கள் மூடப்படவில்லை'

Added : மார் 19, 2020
Share
Advertisement

சென்னை : ''தமிழகத்தை பொறுத்தவரை, சிறு தொழில்கள் எதுவும் மூடப்படவில்லை. அங்குள்ள தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, அச்சம் தேவையில்லை,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்
:எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: வியாபார நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கோழிகள் இறந்துள்ளன. முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அனைத்தும் மூடப்படும் நிலையில், சட்டசபை மூடப்படவில்லை; டாஸ்மாக் மூடப்படவில்லை. கூலி வேலை செய்வோர், சிறு வியாபாரிகள்பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாத இறுதியில்,ஜி.எஸ்.டி., மற்றும் வரி கட்ட வேண்டும்.எனவே, அதற்கு ஆறு மாதம் அவகாசம் அளிக்க வேண்டும். கூலி தொழிலாளர்களுக்கு உதவ, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: சிறு, குறு, நடுத்தரதொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் சலுகைகளை அறிவித்துள்ளன. எனவே, தமிழக அரசும்,'கொரோனா' வைரஸ் தாக்கத்தால் ஏற்படும், பொருளாதார பாதிப்புகளை தடுக்க, வலுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அமைச்சர் கே.சி.வீரமணி: ஜி.எஸ்.டி., வரி தொடர்பாக, நாம் முடிவெடுக்க முடியாது. ஜி.எஸ்.டி., கவுன்சில் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். முதல்வர்: தமிழகத்தை பொறுத்தவரை, சிறு தொழில்கள் எதுவும் மூடப்படவில்லை. அங்குள்ள தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே, அச்சம் தேவை இல்லை. தொழிற்சாலைகளில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது
.அமைச்சர் ராதாகிருஷ்ணன்: கோழிகள் எதுவும் இறக்கவில்லை; விலை குறைந்துள்ளது. நாம் கொடுத்த விளக்கத்தை தொடர்ந்து, விற்பனை அதிகரிக்க துவங்கி உள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X