அரசியல் செய்தி

தமிழ்நாடு

மகளிர் கல்லூரிக்கு கூடுதலாக, 10 கட்டடங்கள்

Added : மார் 19, 2020
Share
Advertisement

சென்னை :''சென்னை, துறைமுகம் தொகுதியில் உள்ள, பாரதி மகளிர் கல்லுாரியில், கூடுதலாக, 10 கட்டடங்கள் கட்டப்படும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - சேகர்பாபு: துறைமுகம் தொகுதியில் உள்ள, பாரதி மகளிர் கல்லுாரியில், கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இரு கட்டடங்களுக்கு நடுவே, சாலை செல்வதால், விபத்தை தவிர்க்க, நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் அன்பழகன்: அந்த கல்லுாரிக்கு, கூடுதலாக, 10 கட்டடங்கள் கட்டித் தரப்படும். நடைமேம்பாலம் கட்ட, 1.21 கோடி ரூபாய் தேவைப்படும். அதை உறுப்பினர், தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்க வேண்டும்.
தி.மு.க., - பொன்முடி: 'கல்லுாரிகளில், சுழற்சி முறையில், பாடங்கள் நடத்தப்படுவது நிறுத்தப்படும்' என, அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், பாரதி கல்லுாரியில், சுழற்சி முறையில் வகுப்புகள் நடக்கின்றன. தேவையான கட்டமைப்பு வசதி ஏற்படும் வரை, இம்முறையை பின்பற்ற வேண்டும். மேலும், நடைமேம்பாலம் கட்ட, எம்.எல்.ஏ., சேகர்பாபு, நிதி ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பழகன்: அனைத்து கல்லுாரிகளிலும், தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. எனவே, சுழற்சி முறையில், வகுப்புகள் நடத்த வேண்டிய தேவை ஏற்படாது.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X