அரசியல் செய்தி

தமிழ்நாடு

மரத்தடியில் வகுப்பு இல்லை என்பதை ஏற்படுத்த, அரசு நடவடிக்கை

Added : மார் 19, 2020
Share
Advertisement

சென்னை : ''மரத்தடியில் வகுப்புகள் நடக்காத நிலையை ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ஆண்டி அம்பலம்:நத்தம் தொகுதி, ராஜக்காபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, குமாரபாளையத்தில், நுாலகம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: 5 சென்ட் நிலம் அல்லது வாடகை கட்டடம் இருந்தால், அரசு பரிசீலிக்கும்.ஆண்டி அம்பலம்: கட்டடம், இடம் உள்ளது; நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், அப்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., - சீதாபதி: திண்டிவனம் தொகுதி, மரக்காணம் பகுதியில், நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், வகுப்பறை இல்லாததால், மாணவர்கள் மரத்தடியில் படிக்கின்றனர்.
அமைச்சர் செங்கோட்டையன்: மாணவர்கள், மரத்தடியில் படிக்கும் நிலையே இல்லை என்பதை ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு, நபார்டு வங்கியில் இருந்து, 223 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; அதில், கட்டடம் கட்டப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X