அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழர்களை மீட்க நடவடிக்கை

Added : மார் 19, 2020
Share
Advertisement

சென்னை:''வெளிநாடுகளில் தவிக்கும், தமிழக மீனவர்கள் மற்றும் மாணவர்களை, தாயகம் அழைத்து வர, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் தெரிவித்தார்.
தீர்மானம்
சட்டசபையில், நேற்று தி.மு.க., - ஆஸ்டின், காங்கிரஸ் - பிரின்ஸ், மனித நேய ஜனநாயக கட்சி - தமிமுன் அன்சாரி ஆகியோர், 'ஈரானில் தவிக்கும் கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மீனவர்கள்; பிலிப் பைன்ஸ் நாட்டிற்கு படிக்க சென்ற, தமிழக மாணவர்களை அழைத்து வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சிறப்பு கவன தீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.அதற்கு பதில்அளித்து, அமைச்சர் உதய குமார் கூறியதாவது: 'கொரோனா வைரஸ்' பரவல் காரணமாக, விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், மீனவர்கள் மற்றும் மாணவர்களை மீட்க, உரிய நடவடிக்கை எடுக்கும் படி, மத்திய அரசை வலியுறுத்துவதுடன், வெளியுறவு அமைச்சகத்திற்கு, முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.உறுதிமலேஷியாவில், கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவித்த, தமிழக மாணவர்கள், நேற்று முன்தினம், விசாகப்பட்டினம் அழைத்து வரப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஈரானில் உள்ள மீனவர்களை, துாதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர். சுற்றுலா சென்றவர்களை, முன்னுரிமை அடிப்படையில், அழைத்து வருகின்றனர். அடுத்து மீனவர்கள் மற்றும் அங்கு தங்கியிருந்தவர்களை, அழைத்து வருவதாக, உறுதி அளித்துள்ளனர். அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, அச்சப்பட தேவையில்லை.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X