அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' தடுப்பு நடவடிக்கை: தமிழக அரசுக்கு ரஜினி பாராட்டு

Updated : மார் 20, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
'கொரோனா',தடுப்பு,நடவடிக்கை,தமிழக அரசுக்கு ,ரஜினி பாராட்டு

சென்னை :'கொரோனா' தடுப்பு நடவடிக்கைகளில், தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக, நடிகர் ரஜினி, டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உதவித்தொகை வழங்க, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, டுவிட்டர் பதிவில், ரஜினி கூறிஇருப்பதாவது: தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு, மக்களாகிய நாமும் இணைந்து, இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழலில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு உதவித் தொகை தந்தால், அது பேருதவியாக இருக்கும் என்பது, என் தாழ்மையான வேண்டுகோள்.இவ்வாறு, ரஜினி கூறியுள்ளார்.'

அரசை பற்றிய பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், திறமையான பணிகளை பாராட்டுவதில், ரஜினி, கட்சி வேறுபாடின்றி செயல்பட்டு வருகிறார். அதேவேளையில், சில குற்றச்சாட்டுகளையும் கோடிட்டு காட்டுவதில், ரஜினி தயங்குவதில்லை.'இதுபோன்ற செயல்கள், தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும்' என்கின்றனர், ரஜினி ரசிகர்கள்.



உலகம் முழுக்க கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கிறது. இந்தியாவில் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரஜினி டுவிட்டரில், ‛‛தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
20-மார்-202019:34:20 IST Report Abuse
Vijay D Ratnam கொரோனா விஷயத்தில் மட்டுமல்ல பொதுவாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மிகச்சிறப்பாக செயல்படுகிறார். கட்சி சாராத பொதுமக்கள் அனைவரின் பாராட்டும் அவருக்கு இருக்கிறது. கட்டுமர கம்பெனியும், அந்த கம்பெனியை அண்டி பொழப்பு நடத்தும் அரசியல்வியாதிகளும், அவிங்க அல்லக்கைகளையும் தவிர்த்து மற்ற எல்லாராலும் பாராட்டப்படுகிறார்.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
20-மார்-202016:37:36 IST Report Abuse
Baskar ரஜினி பாராட்டு தெரிவித்ததற்கு நன்றி. உங்களால் முடிந்தால் நீங்களும் அரசுக்கு உதவலாமே.
Rate this:
Cancel
Vetri - Chennai,இந்தியா
20-மார்-202014:00:29 IST Report Abuse
Vetri enna அன்னமல பயந்திட்டியா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X