வங்கி கடன் தவணைகளை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வங்கி கடன் தவணைகளை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

Added : மார் 19, 2020
Share

சென்னை,:'கொரோனா பாதிப்பால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், வங்கிக் கடன் தவணைகளை, 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறியுள்ளார். 'டுவிட்டர்' பக்கத்தில், ராமதாஸ் கூறியிருப்பதாவது:

*கொரோனா அச்சுறுத்தலால், சி.பி.எஸ்.இ., தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், தற்போது நடந்து வரும், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளையும், 27ம் தேதி துவங்கும், 10ம் வகுப்பு தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும் ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை, கோடைக் காலம் வரை நீட்டித்து, அடுத்த கல்வியாண்டில் திறக்க வேண்டும்
* கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகள் கருதி, அனைத்து வகை வங்கிக் கடன் தவணைகளையும், 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்; இந்த காலத்திற்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுதொடர்பாக, பொதுத் துறை வங்கி அதிகாரிகளை அழைத்து, முதல்வர் பேச வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
ஒரே தீர்வு!

பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி அறிக்கை:உலகம் முழுவதும், 'கொரோனா வைரஸ்' நோய் பரவலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா வைரசின் தீவிரத்தையும், அது பரவும் வேகத்தையும் பார்க்கும்போது, மூன்றாம் நிலை நோய் பரவலை தடுக்க, நான் ஏற்கனவே கூறியவாறு, அடுத்த மூன்று வாரங்களுக்கு, முழு அடைப்பு செய்வது தான், ஒரே தீர்வு.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X