அரசியல் செய்தி

தமிழ்நாடு

வங்கி கடன் கட்டாய வசூல் கூடாது: வாசன்

Added : மார் 19, 2020
Share
Advertisement

சென்னை :'வங்கி கடனை கட்டாயப்படுத்தி வசூலிக்காமல் இருக்க, தவணை தொகை செலுத்த, ஆறு மாதம் அவகாசம் வழங்குவது தொடர்பான அறிவிப்பை, மத்திய - மாநில அரசுகள் வெளியிட வேண்டும்' என, த.மா.கா., தலைவர், வாசன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:உலக அளவில், கொரோனா வைரஸ் தொற்று நோயால், உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சில மாதங்களாகவே, சிறு, குறு நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் பின்னடைவு, வேலையில்லா திண்டாட்டம், வங்கி கடன் பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால், பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்துள்ளன.

'கொரானா' வைரஸ் தடுப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நல்ல நடவடிக்கைகளால், அனைத்து தரப்பு மக்களும் பாதுகாக்கப்பட்டாலும், பொருளாதாரத்தை ஈட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர்.எனவே, வங்கிக் கடனை கட்டாயப்படுத்தி, வசூல் செய்யாமல் இருக்கவும், தவணை தொகை செலுத்த ஆறு மாத அவகாசம் வழங்கவும், மத்திய - மாநில அரசுகள், அறிவிப்பு வெளியிட முன் வர வேண்டும்.இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X