புதிய நோயாளிகள் யாரும் இல்லை 3 மாதங்களுக்கு பின் சீனா நிம்மதி

Added : மார் 19, 2020
Share
Advertisement
 புதிய நோயாளிகள் யாரும் இல்லை 3 மாதங்களுக்கு பின் சீனா நிம்மதி

பீஜிங், 'மூன்று மாதங்களுக்கு பின், 'கொரோனா' வைரசால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை' என, சீனா தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்நாடு நிம்மதி அடைந்துள்ளது. கொரோனா வைரஸ், இப்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும், 2.04 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்;
8,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்; 83 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இந்தக் கொடிய நோய், நம் அண்டை நாடான சீனாவில் தான், மூன்று மாதங்களுக்கு முன் பரவத் துவங்கியது. இங்கே, 80 ஆயிரத்து, 894 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில், 3,237 பேர் உயிரிழந்தனர். தற்போது, சீனாவில், இந்த வைரசின் வீரியம் குறைந்துள்ளது.

கொரோனாவின் மையம் எனக் கருதப்பட்ட ஹூபய் மாகாணத்தின் வூஹான் நகரில், சமீபத்தில், புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என, சீனா தெரிவித்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளும் மூடப்பட்டுவிட்டன.கொரோனா பரவிய நாளில் இருந்து தற்போது வரை, தங்கள் குடும்பங்களைப் பிரிந்து, 24 மணி நேரமும் பணியாற்றிய டாக்டர்களும், ஊழியர்களும், வீடு திரும்ப துவங்கியுள்ளனர்.இது குறித்து, சீனாவின் தேசிய சுகாதார ஆணைய அதிகாரி மி பெங் கூறியதாவது:சீனாவில், கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாகாணம் ஹூபய். இங்கு புதிய நோயாளிகள் யாரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. தற்போது, சீனாவில், 7,336 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 2,070 பேர் சற்று கடுமையாகவும், 503 பேர் கடுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் விரைவில் குணமடைந்து, வீடு திரும்புவர்.இவ்வாறு, அவர் கூறினார்.கொரோனா வைரஸ் தொற்றை, சீனா படிப்படியாக அழித்தொழித்திருப்பது, உலக நாடுகளை மகிழ்ச்சியடையச் செய்து உள்ளது. சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்அமெரிக்காவில் பணியாற்றும் சீன பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, சீன பத்திரிகையாளர்கள் எண்ணிக்கையை குறைக்க, டிரம்ப் அரசு உத்தரவிட்டது. இது, சீனாவுக்கு அதிர்ச்சியை அளித்தது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தங்கள் நாட்டில், 'தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகைகளில் பணியாற்றும் அமெரிக்கர்களை வெளியேற்ற, சீன அரசு முடிவு செய்துள்ளது.இதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மைக் போம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார். '

'சீனாவின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இந்த முடிவை, சீனா மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறேன்.'' என்றார்.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், 'சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து, அமெரிக்க பத்திரிகையாளர்களை வெளியேற்ற, சீன கம்யூனிஸ்டு தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.'இது, சீனாவைப் பற்றிய உண்மையான தகவல்கள் கிடைக்காமல், மக்களை தவிக்க விடும் நிலையைத் தான் ஏற்படுத்தும். இதை, சீன அரசு, மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X