பாதிக்கப்பட்டோருக்கு உதவி அறிவித்தார் டிரம்ப்

Added : மார் 19, 2020
Share
Advertisement

வாஷிங்டன்: 'கொரோனா' வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உதவ, பல கோடி ரூபாய் மதிப்புள்ள அவசர கால நிதி திட்டத்தை, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவில், 9,464 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளது உறுதியாகி உள்ளது. அதில், 155 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின், 50 மாகாணங்களிலும், வைரஸ் பரவியுள்ளது. நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் உதவிடும் வகையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை செயல்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதை, அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார்.'கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கான உதவிச் சட்டம்' என்ற இந்த சட்டம், அமெரிக்க பார்லி.,யில் நிறைவேறியது. பிரதிநிதிகள் சபையில், 363 - 40 என்ற கணக்கிலும், செனட் சபையில், 90 - 8 என்ற கணக்கிலும் இதற்கான மசோதா நிறைவேறியது. அதையடுத்து, இந்த சட்டத்துக்கு, டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த சட்டத்தின்படி, கொரோனாவில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும், இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும். மருத்துவ கப்பல்பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாருக்கு உரிய பொருளாதார இழப்பீடு வழங்கப்படும். வரிச் சலுகை, வரி தள்ளுபடி போன்ற சலுகைகளும் அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.'தனிமைபடுத்தப்பட்டுள்ளோர், மற்றவர்களை கவனித்து கொள்வோர், குழந்தைகளை கவனித்து கொள்வோர் என, அனைத்து தரப்பினருக்கும் பாதிப்புக்கேற்ற சலுகைகள் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், சிறப்பான சிகிச்சை அளிக்கும் வகையில், அமெரிக்க கடற்படையின், இரண்டு மருத்துவமனை கப்பல்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அவை குறிப்பிட்ட நகருக்கு அருகில் நிறுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, இரண்டு, எம்.பி.,க்களுக்கு வைரஸ் தொற்று உள்ளது உறுதியாகி உள்ளது. குடியரசு கட்சியின் மரியோ டயாஸ்படார் மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பென் மெக்ஆடம்ஸ் ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேயர் பீதிநியூயார்க் நகரில், வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. அங்கு, 2,900 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதுவரை, 21 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் மட்டும், ஒரே நாளில், புதிதாக, 923 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.'மாகாண அரசு தலையிட்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், நியூயார்க்கில் மட்டும், மிக விரைவில், 10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது' என, நகர மேயர் பில் டி பிளேசியோ கூறியுள்ளார்.இந்திய துாதரகம் கோரிக்கைஅமெரிக்காவில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது, 300க்கும் மேற்பட்ட பல்கலைகள், கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. 'ஆன்லைன்' மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.விடுதிகளில் இருந்து வெளியேற, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது, பயணத்துக்கு தடை உள்ளதால், இந்த மாணவர்கள் விவகாரத்தில், தகுந்த, சாதகமான முடிவை எடுக்கும்படி, அமெரிக்காவில் உள்ள இந்திய துாதரகம் மூலம், அமெரிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X