சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உ.பி., வாலிபரால் பரவும் அபாயம் மூன்றாவது நபருக்கு, 'கொரோனா'

Added : மார் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 உ.பி., வாலிபரால் பரவும் அபாயம் மூன்றாவது நபருக்கு, 'கொரோனா'

சென்னை :அயர்லாந்து நாட்டில் இருந்து, சென்னை வந்த நபருக்கு, 'கொரோனா வைரஸ்' பாதிப்பு, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்தது.சென்னையை சேர்ந்த, 21 வயது வாலிபர், அயர்லாந்து நாட்டின், டூப்ளின் நகரில் படித்து வருகிறார். அங்கிருந்து, 17ம் தேதி, சென்னை விமான நிலையம் வந்தார். பரிசோதனைவிமான நிலையத்தில் நடந்த பரிசோதனையில், அவருக்கு, கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது.
அப்போது காய்ச்சல் இல்லாததால், அவரது வீட்டிலேயே, தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.இந்நிலையில், நேற்று முன்தினம், அவருக்கு காய்ச்சல் அதிகரித்ததை தொடர்ந்து, சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தனிமைப்படுத்தப்பட்ட அறையில், சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது ரத்த மாதிரிகள், கிங்ஸ் ஆய்வகத்தில், பரிசோதனை செய்யப்பட்டன. அதில், அவருக்கு, கொரோனா வைரஸ் இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, தமிழகத்தில், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்துள்ளது. இதில், முதலில் பாதிக்கப்பட்ட, காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் குணமடைந்து, அவரது வீட்டில், தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த, 20 வயது நபர் மற்றும் சென்னையை சேர்ந்த, 21 வயது நபருக்கு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசுக்கு சவால்இதில், உ.பி.,யை சேர்ந்த நபர், பலரிடம் நெருங்கி பழகியுள்ளார். அவர்களில், 10க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், அவரிடம் தொடர்பில் இருந்தவர்களை, முழுமையாக அடையாளம் காணுவது, அரசுக்கு சவாலாக உள்ளது.அயர்லாந்து நாட்டில் இருந்து, சென்னை வந்த நபருடன், விமானத்தில் பயணம் செய்த நபர், அவரது குடும்பத்தை சேர்ந்தோர் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்ற, விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற காரணத்தால், சென்னையில் பலருக்கு, கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.இதுகுறித்து, சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, இதுவரை, 1 லட்சத்து, 94 ஆயிரத்து, 236 பேர் வந்துள்ளனர். கண்காணிப்புஅவர்களில், கொரோனா அறிகுறி தென்பட்ட, 3,481 பேர், அரசின் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் அவர்களது வீட்டிலேயே தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 1,120 படுக்கை வசதியுடன் கூடிய, தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன; அதில், 39 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை, 320 பேரிடம், ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது; மூன்று பேருக்கு, பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது; 232 பேருக்கு பாதிப்பு இல்லை என, தெரிய வந்துள்ளது; 85 பேருக்கு, இன்று முடிவுகள் தெரிய வரும். மேலும், ஒருசிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.பொது மக்கள், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
20-மார்-202010:41:12 IST Report Abuse
Jaya Ram அவனை முதலில் உத்தரப்பிரதேஷத்திற்கு கடத்துங்கள் வெளிமாநிலங்களில் இருந்தது யாரையும் வேலைக்கு எடுக்கக்கூடாது என் தனியார் ஹொழிலதிபர்களுக்கு உத்தரவிடவும் அப்படி வேலைக்கு செய்து அவர்களால் ஏதாவது சட்டம் ஒழுங்கு , சுகாதாரம் சம்பந்தப்பட்டவைகள் பாதிக்கப்பட்டால் அவரை வேலைக்கு அமைதியா முதலாளிகளுக்கு பத்தாண்டு சிறை என் அறிவியுங்கள் அய்யா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X