அரசியல் செய்தி

தமிழ்நாடு

சந்தைகள், பெரிய கடைகள் மூடல்: 'கொரோன அச்சுறுத்தல் எதிரொலி

Updated : மார் 20, 2020 | Added : மார் 19, 2020
Share
Advertisement
 சந்தைகள், பெரிய கடைகள் ,மூடல், 'கொரோனா ,அச்சுறுத்தல் எதிரொலி

சென்னை :'தமிழகத்தில், வார சந்தைகள், பெரிய ஜவுளி கடைகள், நகை கடைகள் போன்றவை, இன்று முதல், 31ம் தேதி வரை மூடப்படும்; பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில், தரிசனம் நிறுத்தப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், 'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர், இ.பி.எஸ்., நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வு நடத்தினார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அனைத்து துறை செயலர்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* அனைத்து மாவட்டங்களிலும், தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்காக, சிறப்பு மருத்துவமனைகளை, உடனடியாக ஏற்படுத்த வேண்டும். வார சந்தைகள் அனைத்தும், மார்ச், 31 வரை மூடப்பட வேண்டும்

* தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், சிறு, குறு மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், வீட்டிலிருந்தே பணி செய்ய, அனுமதிக்க வேண்டும்

* மக்கள் அதிகம் செல்லக்கூடிய, 'ஏசி' வசதி உடைய, பெரிய ஜவுளி கடைகள், பெரிய நகை கடைகள், மிகப்பெரிய கடைகள், இன்று முதல் மூடப்படும். நகை கடையில் ஏற்கனவே கொடுத்த ஆர்டர்படி, பொருட்களை பெற்று செல்ல, தனி வழியை பயன்படுத்தலாம்

* மளிகை கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கனி கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் வழக்கம் போல செயல்படும்

*சென்னை, வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்துார் முருகன் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், பழநி முருகன் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், திருத்தணி முருகன் கோவில்.

* காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் போன்றவற்றில், இன்று முதல் வரும், 31 வரை, பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்படும். எனினும், ஆகம விதிகளின்படி, கோவில்களில் அனைத்து கால பூஜைகளும், எப்போதும் போல் நடக்கும்

*மக்கள் அதிகம் வரக்கூடிய, பெரிய தேவாலயங்கள், மசூதிகள், தர்காக்கள் போன்றவற்றில், வரும், 31 வரை, பொதுமக்கள் வருவதை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க, அனைத்து மாவட்ட கலெக்டர்களும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் பேசி, தகுந்த அறிவுரை வழங்கி, அதை கடைப்பிடிக்க வேண்டும்

*மாநிலங்களுக்கு இடையிலான, பஸ் போக்குவரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது. பிற மாநிலங்களிலிருந்து வரும், ரயில் போக்குவரத்தையும், கணிசமாக குறைக்க, தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, முதல்வர் அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X