சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆண்டிபட்டி அருகே பெண் சிசு கொலை :கொடூர தாய், பாட்டி கைது

Added : மார் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆண்டிபட்டி அருகே பெண் சிசு  கொலை :கொடூர தாய், பாட்டி கைது

ஆண்டிபட்டி, :தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிறந்து 6 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்த தாய், பாட்டியை போலீசார் கைது செய்தனர்.ஆண்டிபட்டி மொட்டனுாத்து அருகே ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் 33. இவரது மனைவி கவிதா 29. இவர்களுக்கு 11 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பாண்டி மீனா 10, ஹரிணி 7, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கவிதாவுக்கு பிப். 26-ல் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. இரண்டு நாட்களில் தாய் குழந்தையுடன் ராமநாதபுரம் வீட்டிற்கு சென்று விட்டார். மார்ச் 2-ல் பச்சிளம் குழந்தை தாய்ப்பால் கொடுக்கும்போது மூச்சுத் திணறி இறந்து விட்டதாக கூறி உடலை வீட்டிற்கு அருகில் புதைத்து விட்டனர். இதில் சந்தேகமடைந்த மாவட்ட குழந்தைகள் நல மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகருக்கு தகவல் கொடுத்தனர்.

கைதுமொட்டனுாத்து வி.ஏ.ஓ.,தேவி விசாரித்தபோது, கவிதா, பாட்டி செல்லம்மாள் 51, முன்னுக்குப்பின் முரணான பதிலளித்தனர். ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சீனிவாசன், ராஜதானி இன்ஸ்பெக்டர் பாலகுரு, போலீசார் விசாரித்ததில், மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் எருக்கம்பால் கொடுத்து குழந்தையை கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். தாசில்தார் முன்னிலையில், குழந்தை உடல் தோண்டி எடுக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர் கோகுலபாண்டி பரிசோதனை செய்தார். தாய் கவிதா, பாட்டி செல்லம்மாளை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சமீபத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh babu - chennai,இந்தியா
20-மார்-202016:44:34 IST Report Abuse
ramesh babu mudalla ungala than thookula podanum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X