சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துபாயில் இருந்து மதுரை வந்த 144 பேர் கண்காணிப்பு மையங்களில் அனுமதி

Added : மார் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
துபாயில் இருந்து மதுரை வந்த 144 பேர் கண்காணிப்பு மையங்களில் அனுமதி

அவனியாபுரம், :துபாயில் இருந்து விமானத்தில் மதுரை வந்த 144 பேர் தனிமை கண்காணிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் சுகாதாரத்துறையினர் கண்காணிக்க உள்ளனர்.துபாயில் இருந்து நேற்று மாலை 4:40 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் மதுரை வந்தது. அதில், தென்மாவட்டங்களை சேர்ந்த 144 பேர் வந்திறங்கினர். அவர்களை சுகாதாரத்துறையினர் பரிசோதித்தனர். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை 15 நாட்கள் தனிமை கண்காணிப்பு மையங்களில் தங்க வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்காக மதுரையில் சின்னஉடைப்பு, ஆஸ்டின்பட்டியில் 180 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட சிறப்பு மையங்களுக்கு 144 பேரையும் அழைத்துச் செல்ல 4 பஸ்கள் வரவழைக்கப்பட்டன. அவர்களில் 15 பேர் மையங்களுக்கு செல்ல மறுத்தனர். ஒரு வேளை தங்களுக்கு பாதிப்பு இருந்தால், மற்றவர்களுக்கும் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தும் என்ற அறிவு இல்லாமல் அடம் பிடித்தனர்.விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், ஆர்.டி.ஓ., சவுந்தர்யவள்ளி, டி.எஸ்.பி., அருண், சுகாதாரத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சின்ன உடைப்பு மையத்திற்கு 100 பேரும், ஆஸ்டின்பட்டி மையத்திற்கு 44 பேரும் அழைத்து செல்லப்பட்டனர்.இருவாரம் வரை சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருப்பர். தினமும் 3 முறை அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்வர். கொரோனா பாதிப்பு இல்லாதபட்சத்தில் அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
20-மார்-202007:16:31 IST Report Abuse
Girija ஒரு காவி சட்டைக்காரன் பில்டிங் கான்ட்ராக்ட்டிங் ரொம்ப பிலிம் காட்டினான், அவன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று , அதிகாரிகள் செவிட்டில் அறைந்து இழுத்து சென்றிருக்க வேண்டும். தொலைக்காட்சி ஊடகங்கள் அரசு சாப்பாடு தண்ணீர் என்று எதுவும் தராமல் கொடுமை செய்தது போல் சித்தரித்தது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X