போட்டி போட்டு வேகமாக செல்லும் பஸ்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போட்டி போட்டு வேகமாக செல்லும் பஸ்கள்

Added : மார் 19, 2020
Share

வடலுார்:வடலுார் - கடலுார் மார்க்கத்தில் போட்டி போட்டு வேகமாக செல்லும் பஸ்களால் பயணியர் கலக்கத்தில் பயணம் செய்யும் சூழல் நிலவுகிறது.
வடலுாரில் இருந்து கடலுார் நகருக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினசரி இயக்கப்படுகிறது.தற்போது பள்ளி, கல்லுாரிகள் கொரோனா தொற்று காரணமாக விடுமுறை விடப்பட்டிருந்தாலும், பஸ்களில் பயணியர் கூட்டம் அலுவலக நேரங்களில் அதிக அளவில் இருந்து வருகிறது.இந்த சமயங்களில் கடலுார் தடத்தில் பயணியரை ஏற்றி செல்வதில் அரசு மற்றும் தனியார் பஸ்களிடையே அடிக்கடி போட்டி ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.தங்கள் நேரத்தை தாண்டி ஒரு பஸ் வடலுார் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தால், அடுத்து வரும் பஸ்சின் நடத்துனர், தாமதமாக செல்லும் பஸ்சின் நடத்துனரிடம் தகராறில் ஈடுபடுகிறார். இதையடுத்து குறிஞ்சிப்பாடிக்கு சென்று பயணியரை ஏற்றுவதில் போட்டி போட்டு வேகமாக பஸ்களை இயக்குகின்றனர்.
இது குறித்து பயணிகள் கூறுகையில், தனியார் பஸ்கள் சில வேகமாகவும், பாதுகாப்பின்றியும் இயக்கப்படுகின்றன.இந்த நிலை வடலுார் தொடங்கி, குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, கடலுார் வரை நீடிக்கிறது. அப்போது பஸ்களில் பயணம் செய்யும் முதியோர், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலக்கத்திற்கு ஆளாகின்றனர்.பயணியர் சிலர் பொறுமை இழந்து நடத்துனர்களிடம் சண்டையிடும் சூழல் ஏற்படுகிறது' என்றனர்.பிரச்னையை தவிர்க்க, கடலுார் வட்டார போக்குவரத்து அலுவலர் கடலுார் - வடலுார் மார்க்க பஸ்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X