கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைகளை மூடக்கோரி வழக்கு தள்ளுபடி

Added : மார் 19, 2020
Share
Advertisement

மதுரை :சிவகாசி சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் நெருக்கமான தெருக்களில் மதுக்கடைகள் மற்றும் பார்கள் உள்ளன. பல இடங்களில் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் கொரோனோ தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே மார்ச் 31 வரை மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இம்மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி. புகழேந்தி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்கு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X