சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தருக்கு பிரதமர் மோடி பெயரில் போலி 'டுவிட்'போலீஸ் விசாரணை

Added : மார் 19, 2020
Share
Advertisement

மதுரை :'கொரோனா பீதியை முன்னிட்டு விடுமுறை அளிக்க வேண்டும்' என மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் மற்றும் சில கல்லுாரிகளுக்கு பிரதமர் மோடி பெயரில் போலி 'டுவிட்' செய்தியை பரப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக அரசு மார்ச் 17 முதல் 31 வரை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பெயரில் போலியாக 'டுவிட்' கணக்கு துவங்கி அதில் மோடி போட்டோவுடன், 'இது நாட்டில் சிறந்த பல்கலைகளில் ஒன்று. நாட்டின் சிறந்த மாணவர்களின் உயிரை நாம் பணயம் வைக்க முடியாது. பல்கலையை உடனடியாக மூடுங்கள்... கொரோனா... கொரோனா கோ ேஹ... கோவிட் -19 லீவ் ேஹ...' என்ற செய்தி மார்ச் 16 முதல் பல்வேறு வாட்ஸ் ஆப் குரூப்களில் பரவின.இத்தகவல் துணைவேந்தர் கிருஷ்ணனுக்கு தெரியவந்தது. அவர் உத்தரவின்பேரில் பதிவாளர் சங்கர் நடேசன் கொடுத்த புகாரின்பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.துணைவேந்தர் கூறுகையில், "இதை பரப்பியோர் பெயர் விவரம் தெரியவில்லை. நாட்டில் நிலவும் இச்சூழ்நிலையில் இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்புவதை கைவிட வேண்டும். அரசு அறிவுறுத்தியபடி பல்கலைக்கு ஏற்கெனவே விடுமுறை அளிக்கப்பட்டது.பல்கலையை தொடர்புபடுத்தி பிரதமர் பெயரில் பரவும் இதுபோன்ற போலி செய்தியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட மர்ம நபர்கள் குறித்து விரைவில் கண்டுபிடிக்கப்படும்" என்றார்.பேராசிரியர்கள் கூறியதாவது:மார்ச் 16ல் இந்த பதிவை சிலர் வாட்ஸ் ஆப் குரூப்களில் பதிவிட்டுள்ளனர். மார்ச் 18 தான் இத்தகவல் பல்கலைக்கு தெரியவந்தது. இதுபோல் மதுரையில் உள்ள முக்கிய கல்லுாரிகள் முதல்வர்களுக்கும் 'டுவிட்' தகவல் சில 'வாட்ஸ் ஆப்' குரூப்புகளில் பகிரப்பட்டன. இதன் பின்னணியில் ஆசிரியர் அல்லது மாணவர்கள் உள்ளனரா என போலீசார் விசாரிக்கின்றனர், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X