பொது செய்தி

தமிழ்நாடு

கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில்கொரோனா வைரஸ் தடுப்பு முகாம்

Added : மார் 19, 2020
Share
Advertisement
 கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில்கொரோனா வைரஸ் தடுப்பு முகாம்

புவனகிரி:கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு முகாமை சேர்மன் துவக்கி வைத்தார்.
கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், முருகன் முன்னிலை வகித்தனர். சேர்மன் கனிமொழிதேவதாஸ்படையாண்டவர், துணைச்சேர்மன் காஷ்மீர்ச்செல்விவினாயகம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பின் துண்டு பிரசுரம், முக கவசங்களை வழங்கினர். ஒரத்துார் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சிபி கைகழுவதின் அவசியம் உள்ளிட்ட விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர் சேர்மன் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை துவக்கி வைத்தார். பின்னர் நடந்த கலந்தாய்வுக்கூட்டத்தில் ஊராட்சி செயலர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டேங்க் ஆபரேட்டர்களுக்கு ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் , அதிகாரிகள் ,ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். துணை வட்டாரளர்ச்சி அலுவலர் கணேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X