பொது செய்தி

இந்தியா

செய்திகள் சில வரிகளில்

Added : மார் 19, 2020
Share
Advertisement

டிரக் தீ விபத்தில் 5 பேர் பலி

சாஜபுர்: மத்திய பிரதேசத்தில், தேவாசில் இருந்து, சரங்பூர் சென்று கொண்டிருந்த டிரக், நாக்பூரில் இருந்து குவாலியர் நோக்கி வந்து கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு டிரக்குகளும் தீப்பிடித்து எரிந்ததில், அவற்றில் இருந்த ஓட்டுனர்கள் உள்ளிட்ட, ஐந்து பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிங்கப்பூரிலிருந்து 90 இந்தியர்கள் திரும்பினர்

சிங்கப்பூர்: பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வழியே, இந்தியா வர இருந்தவர்கள், மத்திய அரசின் தடையால், சிங்கப்பூர் விமான நிலையத்திலேயே முடங்கிக் கிடந்தனர். அவர்களை உள்ளே விட, சிங்கப்பூர் அரசும் மறுத்து விட்டது. இந்நிலையில், நேற்று, 90 பேர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம், இந்தியா திரும்பினர். அடுத்து, இவ்வார இறுதியில், இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுவர் என, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தனியிடத்திற்கு போக மாணவர்கள் மறுப்பு

ஸ்ரீநகர்: வங்கதேசத்தில் இருந்து, காஷ்மீர் திரும்பிய, 160 மாணவர்கள், கொரோனா கண்காணிப்பிற்காக, தனிமைப்படுத்தப்படுவதை எதிர்த்து, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, தனிமைப்பகுதிக்கு கொண்டு சென்றனர். இதனிடையே, ஈரானில், கொரோனா பாதித்த இந்தியர் ஒருவர், நேற்று உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X