பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Added : மார் 19, 2020
Share
Advertisement
 பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

புவனகிரி:புவனகிரி அருகே பூமணவெளி ஐயனார்கோவில் வளாகத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
புவனகிரியில் இருந்து பூமணவெளி, ஆலம்பாடி, கிருஷ்ணாபுரம், மருதுார், கொளக்குடி, நத்தமேடு மற்றும் குமுடிமூலை வழியாக வடலுார் மற்றும் குறிஞ்சிப்பாடி செல்லும் சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.இந்த சாலையில் பூமணவெளி ஐயனார்கோவில் வளாகத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை வாரசந்தை நடத்துகின்றனர். இதனால் சுற்றுபகுதிபொதுமக்கள் பல்வேறு பொருட்களை வாங்கி பயன் பெறுகின்றனர். அதே வேளையில் வாரச்சந்தையில் பயன்படுத்திய கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அருகில் உள்ள வயல்பகுதியில் வீசிச்செல்வதால் குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளது.இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், சுகாதார சீர்க்கேடுகள் ஏற்படும் அவலம் உள்ளதுடன் துர்நாற்றம் வீசுகிறது. சம்மந்தப்பட்ட அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X