பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலை கழகத்தில் மரம் நடும் விழா

Added : மார் 19, 2020
Share
Advertisement
 பல்கலை கழகத்தில் மரம் நடும் விழா

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலகழகத்தில் நடந்த மரக்கன்று நடும் விழாவில் துணை வேந்தர் முருகேசன் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இயற்கை சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் பல்கலைக்கழக வாளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. துணைவேந்தர் முருகேசன் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டார். மேலும் இது போன்ற பயன் தரும் மரக்கன்றுகளை பல்கலைக் கழக வளாகத்தில் அதிகளவு நடுமாறு கேட்டுக் கொண்டார். விழாவில் வரலாற்றுத்துறை தலைவர் ராஜன், அரசியல் அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியன், மேலாண்மை துறை உதவிபேராசிரியர் சிவகுமார், வளர்ச்சி மற்றும் நிர்வாக இயக்குநர் அருட்செல்வன், உதவி செயற் பொறியாளர் கேசவன் மற்றும் தொழில் நுட்ப அலுவலர் சீனிவாசன் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்தையா நகர் இயற்கை ஆர்வலர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்களுடன் இணைந்து, தன்னார்வலர்கள் ஏராளமான மரக்கன்றுகளை பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடங்கள் அருகில் நட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X