மண் சாலையாக மாறிய காட்டுப்பள்ளி சாலை

Added : மார் 19, 2020
Share
Advertisement
 மண் சாலையாக மாறிய காட்டுப்பள்ளி சாலை

மீஞ்சூர்: காட்டுப்பள்ளியில் இருந்து, காளஞ்சி வழியாக பழவேற்காடு செல்லும் சாலை, மண் சாலையாக இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளி பகுதியில் துறைமுகம், கப்பல் கட்டும் தளம், கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனம் மற்றும், வடசென்னை அனல் மின் நிலையங்கள் ஆகியவை உள்ளன.இங்குள்ள தொழில் நிறுவனங்களில், பழவேற்காடு மீனவ பகுதியில் இருந்து, நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில், மேற்கண்ட தொழிலாளர்கள் பழவேற்காடு- - காட்டுப்பள்ளி சாலை வழியாக, இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.இந்த சாலையில், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டும், மண் சாலையாகவும், மாறி கிடப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.சாலையில் குவிந்து கிடக்கும் மணலில், வாகனங்கள் சிக்கி தடுமாற்றத்துடன் செல்கின்றன. ஒரு சில வாகன ஓட்டிகளை வண்டியை தள்ளி செல்லும் நிலை உள்ளது.இரவு நேரங்களில், மண் குவியலில் சிக்கி, வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்களில் சிக்கி தவிக்கின்றனர்.பழவேற்காடு முதல், காட்டுப்பள்ளி வரை உள்ள சாலையை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் கடற்கரையோர மீனவ கிராமத்தினர்வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X