பராமரிப்பில்லாத கட்டுக்குடிப்பட்டி மலைப்பாதை| Dinamalar

பராமரிப்பில்லாத கட்டுக்குடிப்பட்டி மலைப்பாதை

Added : மார் 19, 2020
Share
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் இருந்து முட்டாக்கட்டி, ஒடுவன்பட்டி வழியாக கட்டுக்குடிப்பட்டி, புழுதிபட்டி, எஸ்.புதுார் செல்லும் மலைப்பாதையை அவ்வழியாக செல்லும் குடி மகன்களால் திறந்தவெளி பாராக மாறியுள்ளது. சிங்கம்புணரி ஒன்றியத்தில் இருந்து எஸ்.புதுார் ஒன்றியம் செல்வதற்கான இணைப்புச்சாலையாக மலை, குன்றுகளில் 5 கி.மீ. துாரம் செல்லும் மேலவண்ணாயிருப்பு மலைப்பாதை

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் இருந்து முட்டாக்கட்டி, ஒடுவன்பட்டி வழியாக கட்டுக்குடிப்பட்டி, புழுதிபட்டி, எஸ்.புதுார் செல்லும் மலைப்பாதையை அவ்வழியாக செல்லும் குடி மகன்களால் திறந்தவெளி பாராக மாறியுள்ளது.

சிங்கம்புணரி ஒன்றியத்தில் இருந்து எஸ்.புதுார் ஒன்றியம் செல்வதற்கான இணைப்புச்சாலையாக மலை, குன்றுகளில் 5 கி.மீ. துாரம் செல்லும் மேலவண்ணாயிருப்பு மலைப்பாதை உள்ளது.இதன் வழியாக தினமும் ஏராளமானோர் நடந்தும், இருச்சக்கர வாகனத்திலும் பயணம் செய்கின்றனர். இச்சாலை உச்சியில் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுத்து செல்வதற்காக பலகைக்கற்கள் போடப்பட்டுள்ளது.மனதுக்கு இதமான அமைதியை தருவதாலும் பலர் இந்த இடத்தில் அமர்ந்து ஓய்வு எடுத்தும் காலை, மதியம் உணவு அருந்தியும் செல்வதும் வழக்கம்.பிரான்மலையை கிரிவலம் வருவோரும் இந்த சாலை வழியாக வந்து இந்த இடத்தில் தான் ஓய்வு எடுத்துச்செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த இடத்தை குடி மகன்கள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் அடிவார கிராமங்களில் உள்ள மதுக்கடைகளில் இருந்து வாங்கிவரும் மதுபானங்களை இங்கு அமர்ந்து அருந்துவதுடன் பாட்டிலை உடைத்து போடுவதோடு, அவ்வழியாக செல்பவர்களிடம் தகராறும் செய்கின்றனர்.இவ்வழியாக தனியாக செல்ல பெண்கள் உள்ளிட்டோர் அஞ்சுகின்றனர். எனவே இந்த இடத்தில் யாரும் அமர்ந்து மது அருந்தாதவாறு போலீசாரும்,வனத்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X