பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு

Added : மார் 19, 2020
Share
Advertisement
கொரோனா விழிப்புணர்வு

விருத்தாசலம்:விருத்தாசலம் ஜெயின் ஜூவல்லரியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்கி, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது.
தமிழக அரசின் உத்தரவின்படி, விருத்தாசலம் ஜெயின் ஜூவல்லரியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக நகைகள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் வாசலிலேயே சோப்பு போட்டு கைகளை கழுவும் வசதி செய்யப்பட்டுள்ளது.பின்னர், உள்ளே வருவோருக்கு கைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து கொண்டதும், உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது.மேலும், ஜூவல்லரியில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டுள்ளது.நகைகள் வாங்க வருவோரிடம் கொரோனா தாக்கம், பாதுகாப்பு குறித்து உரிமையாளர்கள் அகர் சந்த், சுரேஷ் சந்த், ரமேஷ் சந்த் ஆகியோர் அறிவுறுத்தி வருகின்றனர். இப்பணியை, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், வி.ஏ.ஓ., ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X