பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் விலைக்கு சானிட்டைஸர்; தொழிலாளர் துறை எச்சரிக்கை

Added : மார் 19, 2020
Share
Advertisement

மதுரை : 'முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்றால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என தொழிலாளர் இணை கமிஷனர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தாக்கத்தால் முகக்கவசம், சோப், திரவ வடிவிலான சோப் மற்றும் சானிட்டைஸர் பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்றால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக இரண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு விற்கப்படுவது தெரிந்தால் TN --LMCTS என்ற அலைபேசி 'ஆப்'பில் புகார் அளிக்கலாம். இதில் புகார் தொடர்பான புகைப்படம், குரல் பதிவேற்றம் செய்யும் வசதியும் உள்ளது.மதுரை 0452 - 260 4388, ராமநாதபுரம் 04567 - 221 833, சிவகங்கை 04562 - 240 521, விருதுநகர் 04562 - 252 130 ஆகிய மாவட்ட மக்கள் சம்மந்தப்பட்ட உதவி கமிஷனர்களிடம் (அமலாக்கம்) புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X