போலீஸ் டைரி

Added : மார் 19, 2020
Share
Advertisement

சீட்டாடிய மூவர் பிடிபட்டனர்

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் கிராமத்தை ஒட்டி, முட்புதரில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக, போலீசுக்கு தகவல் கிடைத்தது.பெரியபாளையம் போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, மறைவான பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடிய மூன்று பேரை, கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில், அவர்கள், தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த, ராமதாஸ், 45, முனுசாமி, 50, செல்வம், 45 என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மணல் கடத்தியவர்கள் கைது

செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை பகுதியில், திருவள்ளூர் -- ஆவடி நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக, 'பஜாஜ்' சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், மணல் கடத்தி வந்தது தெரிந்தது.இதையடுத்து, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர், குன்றத்துார் பாபு, 47, என்பவரை கைது செய்தனர். மேலும், மணல் கடத்தி வந்த பஜாஜ் சரக்கு வாகனத்துக்கு பாதுகாப்பாக, 'ஹீரோ டவுன்' இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 46, என்பவரையும் கைது செய்து, இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இளம்பெண் மாயம்

செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை அடுத்த, சிறுகடல் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகள் விசித்ரா, 25. இவர், கடந்த, 16ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின் வீடு திரும்பவில்லை.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, செவ்வாப்பேட்டை போலீசில், இவரது தந்தை பழனி அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X