பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்

Added : மார் 19, 2020
Share
Advertisement

பாலாபிஷேகம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், வியாழக்கிழமையான நேற்று, காலை, 10:00 மணியளவில், குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ -- விஷ்ணு கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது.மேலும், மணவாள நகரில் உள்ள மங்களீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.சாய்பாபாவுக்கு அபிஷேகம்திருவள்ளூர்: திருவள்ளூர், பெருமாள் செட்டி தெருவில் உள்ள ஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடத்தில், வியாழக்கிழமை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, நேற்று காலை, மதியம் நடந்தது. மாலையில், ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி வந்தார்.ஒண்டிக்குப்பம், சாய்பாபா கோவிலில், காலை, மதியம், மாலை மற்றும் இரவு என, நான்கு வேளைகளில் ஆரத்தி நடந்தது. இதே போல், தேவி மீனாட்சி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது.நெய்வேலி கிராமத்தில் உள்ள ராகவேந்திரருக்கு, பஞ்சாமிர்த அபிஷேகமும், மதியம், மஹா மங்கள ஆரத்தியும், இரவு ஸ்வஸ்தி பூஜையும் நடந்தது.திருத்தணி: திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, காலை, 8:00 மணிக்கு, மூலவர் சாய்பாபாவிற்கு, பாலாபிஷேகம் நடந்தது.மதியம், மற்றும் மாலையில் ஆரத்தி நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.'கொரோனா' விழிப்புணர்வுதிருத்தணி: திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நேற்று, 'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமிற்கு, திருத்தணி சார்பு நீதிபதி மணிகண்டன், குற்றவியல் நீதிபதி லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதிகாதேவி பங்கேற்று, 'கொரோனா' வைரஸ் எவ்வாறு பரவுகிறது மற்றும் அதை தடுப்பது குறித்து செயல்முறை செய்து காண்பித்தார்.அதை தொடர்ந்து, கை கழுவும் முறைகள் குறித்து, மருத்துவர் ராதிகாதேவி செய்முறை செய்து காண்பித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X