கணவர் தற்கொலை; மனைவி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் தற்கொலை; மனைவி கைது

Added : மார் 19, 2020
Share
காரைக்குடி: புதுவயல் அருகே உள்ள சின்ன காட்டுக்குறிச்சியை சேர்ந்தவர் நாச்சியப்பன் 55. கொடைக்கானலில் பாரஸ்ட் வாட்சராக வேலைசெய்து வந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மகளின் திருமணத்திற்கு நாச்சியப்பனிடம் 3 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்குமிடையே பிரச்னை எழுந்துள்ளது. விரக்தியடைந்த நாச்சியப்பன் விஷம் சாப்பிட்டு சின்ன காட்டுக்குறிச்சி கண்மாயில்

காரைக்குடி: புதுவயல் அருகே உள்ள சின்ன காட்டுக்குறிச்சியை சேர்ந்தவர் நாச்சியப்பன் 55. கொடைக்கானலில் பாரஸ்ட் வாட்சராக வேலைசெய்து வந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மகளின் திருமணத்திற்கு நாச்சியப்பனிடம் 3 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்குமிடையே பிரச்னை எழுந்துள்ளது. விரக்தியடைந்த நாச்சியப்பன் விஷம் சாப்பிட்டு சின்ன காட்டுக்குறிச்சி கண்மாயில் இறந்து கிடந்தார். மேலும், நாச்சியப்பன், தனது இறப்பிற்கு காரணம் மனைவி சக்தி என எழுதி வைத்துள்ளார். சாக்கோட்டை போலீசார் சக்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

மணல் கடத்தல்

மானாமதுரை: வைகை ஆற்று படுகையில் டிராக்டர்களில் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த பகுதியில் மானாமதுரை போலீசார் ரோந்து சென்ற போது,எதிரே டிராக்டரில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசை பார்த்ததும் நிறுத்தாமல் அவர்கள் மீது ஏற்றுவது போல் வந்து தப்பினர். இது குறித்து போலீஸ் ராமர் மானாமதுரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கொம்புக்காரனேந்தலைச் சேர்ந்த தெய்வேந்திரன், ராஜகம்பீரத்தைச் சேர்ந்த நாகூர்கனி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

காரைக்குடி: கண்டனுார் அருகே உள்ள பாலையூரைச் சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் 13. சில மாதங்களுக்கு முன் முருகேசன் விபத்தில் இறந்த நிலையில், தாய் மீனாட்சி வளர்ப்பில் வளர்ந்து வந்தான். சிறுவனை காணாமல் உறவினர்கள் தேடியுள்ளனர். அய்யனார் கோயில்குளத்தில் மணிகண்டன் இறந்த நிலையில் கிடந்துள்ளான். சாக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X