பொது செய்தி

தமிழ்நாடு

'தேர்வு அறைக்கு மொபைல் எடுத்து செல்ல தடை'

Added : மார் 19, 2020
Share
Advertisement

திருத்தணி: 'பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், மொபைல் போன்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என, மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்ராயன் அறிவுறுத்தினார்.

திருத்தணி கல்வி மாவட்டத்தில், மொத்தம், 55 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 5,605 மாணவர்கள், 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு, 27ம் தேதி முதல், ஏப்., 13ம் தேதி வரை, அரசு பொதுத் தேர்வு நடக்கிறது.இத்தேர்வில் அறை கண்காணிப்பாளர் நியமனத்திற்கு, குலுக்கல் முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி, திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.இதில், மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்ராயன், பள்ளி துணை ஆய்வாளர் வெங்கடேசுலு ஆகியோர் முன் குலுக்கல் நடந்தது.இது குறித்து, திருத்தணி மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்ராயன் கூறியதாவது:பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு, நம் கல்வி மாவட்டத்தில், மொத்தம், 27 மையங்களில் நடக்கிறது.இதற்காக, 350 அறை கண்காணிப்பாளர்கள், 50 பறக்கும் படை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவ, 15 பேர் என, மொத்தம், 415 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுவர்.தேர்வு அறைக்கு, கண்காணிப்பாளர்கள் யாரும் மொபைல் போன்கள் கொண்டு செல்லக்கூடாது.தேர்வு அறைக்கு மாணவர்கள் செல்லும் முன், அவர்களை பரிசோதனை செய்த பின், அனுமதிக்க வேண்டும். தேர்வு நடத்தை விதிமுறைகளை மீறும் ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X