சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆஞ்சநேயர் கோயில் தலைமை கணக்கர் 'சஸ்பெண்ட்'

Added : மார் 19, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

நாமக்கல் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த விவகாரத்தில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் தலைமை கணக்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.நாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் உதவி ஆணையர் அலுவலகத்தில், தலைமை கணக்கராக பணியாற்றியவர் பெரியசாமி, 55. கடந்த, 1990ல் தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்ந்த அவர், சில ஆண்டுகளில் நிரந்தமாக்கப்பட்டார். பதவி உயர்வு மூலமாக தலைமை கணக்கர் நிலைக்கு உயர்ந்தார். இவர், எஸ்.எஸ்.எல்.சி., வரை மட்டுமே படித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் பதவி உயர்வு பெற வேண்டும் என்பதற்காக, போலி மதிப்பெண் சான்றிதழ் நகலை, (வேறொருவர் பதிவு எண் கொண்ட மதிப்பெண் சான்றிதழ்) மொத்தம், 546 மதிப்பெண்கள் பெற்றதாக சமர்ப்பித்துஉள்ளார்.இதையடுத்து, அவர் கணக்கர் பணியில் இருந்து இடமாறுதல் செய்யப்பட்டு, நரசிம்மர் கோவிலில் அர்ச்சனை சீட்டு வழங்கும் பணியில் அமர்த்தப்பட்டார்.இந்நிலையில், சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய, சென்னை அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகத்திற்கு, பெரியசாமி வழங்கிய பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் எண் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து, நாமக்கல் அரசுத் தேர்வுகள் துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தது. இதை ஆய்வு செய்த அத்துறை அலுவலகம், போலி சான்றிதழ் வழங்கியதை உறுதி செய்து கடிதம் அனுப்பியது. இதையடுத்து, பெரியசாமியை, 'சஸ்பெண்ட்' செய்து, உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-மார்-202019:43:16 IST Report Abuse
Bhaskaran முக்கால்வாசி அரசு ஊழியர்கள் பட்டம் போலியே
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
20-மார்-202011:04:46 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அவரை கைது செய்து சிறையில் அடைக்காமல் சஸ்பெண்ட் செய்து அரசு அவரை காப்பாற்றுகிறதா .அரசு ஊழியர்கள் அனைவரது சர்டிபிகேட் சோதனை செய்யப்பட்டால் 70 சதவீதம் பேர் சிக்குவார்
Rate this:
Share this comment
Cancel
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
20-மார்-202009:12:18 IST Report Abuse
Ramachandran Rajagopal அரசு ஊழியர்கள் போலி பட்டதாரிகளாக இருப்பதால் அரசாங்கம் இந்திய அரசமைப்புப்படி செயல்படவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X