சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி போராட்டம் 700 பேர் மீது வழக்கு பதிவு

Added : மார் 19, 2020
Share
Advertisement

கடலுார்:கடலுாரில் தடையை மீறி போராட்டம் நடத்திய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினர் 700 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், இதற்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் அமைப்பு சார்பில் கடலுாரில் தபால் நிலையம் அருகே நேற்று முன்தினம் தடையை மீறி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் சேட் முகமது தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 400 பெண்கள் உட்பட 700 பேர் மீது கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X