தமிழ்நாடு

கிராமப்புறங்களில், 'கொரோனா' விழிப்புணர்வு குறைவு! அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் முன்வருவரா?-

Added : மார் 19, 2020
Share
Advertisement
 கிராமப்புறங்களில், 'கொரோனா' விழிப்புணர்வு  குறைவு! அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் முன்வருவரா?-

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கிராம பகுதிகளில், 'கொரோனா' வைரஸ் குறித்த விழிப்புணர்வு, குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதனால், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள், நகர்ப்புறங்களை போல், கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.சீனாவில் பரவ ஆரம்பித்த, கொரோனா வைரஸ் தாக்கத்தால், உலகம் முழுவதும், ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்; லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவிலும், அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கான தடுப்பு வேளைகளில், மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சுகாதாரத் துறை சார்பில், பலகட்ட பணிகள் நடந்து வருகின்றன.உலகம் முழுவதும், இந்நோய் குறித்த பீதி இருக்கும் நிலையில், கிராமங்களில்,

அது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், செய்யூர், லத்துார் உள்ளிட்ட பகுதிகளின் சுற்று வட்டார கிராமங்களில், பொதுமக்கள் தங்களின் அன்றாட பணிகளை செய்து வருகின்றனர்.வயலில் பாசனம் செய்தல், நெல் மற்றும் வேர்க்கடலை அறுவடை போன்ற தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.கிராமத்தினர், 'உடல் உழைப்பு இருக்கும்போது, வைரஸ் குறித்த அச்சம் எங்களுக்கு இல்லை, உச்சி வெயிலில் தினமும் வேகும் எங்களுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்படாது' எனக்கூறி வருகின்றனர்.

உடல் உழைப்பு எவ்வாறு இருந்தாலும், நகரங்களை விட, சுகாதாரம், துாய்மை போன்ற வசதிகளில், கிராமங்கள் பின்தங்கி உள்ளன.அதனால், நகரங்களை போல், கிராமங்களிலும், வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வை, அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தனியார், 'பீச் ரிசார்ட்', விடுதிகள் மூடப்பட்டுள்ளன.பணிமனைகளில் உள்ள பஸ்கள், தனியார் பஸ்கள், பஸ் நிலையம், காவல் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து, ஊராட்சி செயலருக்கான கூட்டம் நடந்தது. அதில், கிராமங்களில், நோய் தாக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.

தவிர, பல பகுதிகளில், வணிக கடைகள், பொழுதுபோக்கு பூங்கா, சினிமா திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, மக்களும், கூட்டமான பகுதிகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இவ்வாறு இருப்பினும், மக்களின் இயல்பு வாழ்கையில் எந்த பாதிப்பும் இல்லை.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்புக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

அங்கு, செயற்கை சுவாச கருவியும் வைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த மாவட்டத்தில், 10 அவசர வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த வாகனத்தில் உள்ள ஊழியர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஒரு வாகனம் தயார் நிலையில் உள்ளது.ஜீவாசுகாதார துறை இணை இயக்குனர்,காஞ்சிபுரம் மாவட்டம்பங்குனி உத்திர விழாவுக்கு தடைசித்தாமூர் ஒன்றியம், பெருங்கரணை கிராமத்தில் உள்ள, மரகத தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், இந்தாண்டு, ஏப்ரல், 5, 6ம் தேதிகளில், பங்குனி உத்தர விழாவுக்கான ஏற்பாடு நடந்து வந்தது.'கொரோனா' வைரஸ் காரணமாக, பொதுமக்கள் அதிக அளவில் கூடும் விழாக்களுக்கு, அரசு தடை விதித்துள்ளது.

இதனால், பங்குனி உத்திரம் அன்று, இக்கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு, கோவில் நிர்வாகம் அறிவித்து, ஆங்காங்கே சுவரொட்டி ஒட்டியுள்ளது.இலவச கைக்குட்டை வழங்கல்கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு, கை கழுவுவதற்காக கிருமிநாசினி திரவம் வழங்கப்படுகிறது. இதேபோல், பஸ் நிலையம், கோவில் பகுதிகளிலும் பொதுமக்கள் கைகழுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஓரிக்கை ஊர்ப்புற நுாலகத்திற்கு வரும் வாசகர்களுக்கு, வாசகர் வட்டம் சார்பில், இலவச கைகுட்டை வழங்கப்பட்டது

நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X