தமிழ்நாடு

'மூலிகை பூங்கா' பராமரிப்பின்றி வீண்; அரிய வகை மரங்கள் வெட்டி கடத்தல்

Added : மார் 19, 2020
Share
Advertisement
'மூலிகை பூங்கா' பராமரிப்பின்றி வீண்; அரிய வகை மரங்கள் வெட்டி கடத்தல்

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலக பங்களா எதிரே ரூ.பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 'மூலிகை பூங்கா' பராமரிப்பின்றி வீணானது. அரிய வகை மரங்களை கும்பல் வெட்டி கடத்தியுள்ளது

.தேசிய சம வெளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் இரண்டரை ஏக்கரில் ரூ.பல லட்சம் மதிப்பில் மூலிகை பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு வல்லாரை, மரிக்கொழுந்து, பிரண்டை, திப்பிலி, மூக்குத்தி, ஆடாதொடை, நீர்நொச்சி, சித்தரத்தை உள்ளிட்ட 25 அரிய வகை மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டது. ஒவ்வொரு செடிக்கும் அதன் தாவரவியல் பெயர், வயது, பலன் உள்ளிட்டவை எழுதி வைக்கப்பட்டன.

பூங்காவை முறையாக பராமரித்தனர். வேலி அமைத்து பாதுகாத்தனர்.மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து வந்து பார்வையிட வைத்தனர். பூங்காவில் இருந்து வெளியான நறுமணம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. படிப்படியாக பராமரிப்பை கைவிட்டதால் புதர் மண்டியது. மரங்கள் கருகின. அரிய வகை மூலிகை மரங்களை கும்பல் வெட்டி கடத்தியது. பூங்காவை புனரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை வலுக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X