பொது செய்தி

தமிழ்நாடு

சூரிய மின்சக்தி அமைப்பு முடக்கம்

Added : மார் 19, 2020
Share
Advertisement

சிவகங்கை : சிவகங்கை அருகே சோழபுரத்தில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்பு பயன்பாடின்றி வீணாகி வருகிறது.

சிவகங்கையில் தேசிய கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சோழபுரம் வட கரை காளியம்மன் கோயில் அருகே சூரிய மின் சக்தியுடன் கூடிய நீரேற்று மின் மோட்டார் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2016 - 17 நிதியாண்டில் அமைக்கப்பட்டது. சூரிய மின் சக்தி மூலம் மின் மோட்டார் இயக்கப்பட்டு தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டது.

கோயிலுக்கு வருவோர், கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. எனினும் முறையான பராமரிப்பு இல்லாததால் சூரிய மின் சக்தி அமைப்பு முடங்கியது. அதை சரி செய்து மீண்டும் இயக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதிக்கும் பட்சத்தில் சூரிய மின் சக்தி தகடு திருடு போகும் அபாயம் இருப்பதாக சோழபுரம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X