செவிலிமேடு விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செவிலிமேடு விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கல்

Added : மார் 19, 2020
Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில் இயங்கி வரும் நகராட்சி உரம் தயாரிக்கும் கிடங்கில், விவசாயிகளுக்கு, இலவசமாக உரம் வழங்கப்படுகிறது.

காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில், மக்கும் குப்பை மூலம், உரம் தயாரிக்கும் பணி ஜனவரி மாதம் துவங்கியது.நகராட்சியில் ஒன்பது வார்டுகளில், சேகாரமாகும் குப்பை, இந்த உரக்கிடங்கிற்கு எடுத்து வரப்பட்டு, மக்கும் குப்பையில் இருந்து, உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.இதுவரை தயாரான உரத்தை, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு, இலவசமாக கொடுக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. சப் - கலெக்டர் சரவணன் பங்கேற்று, விவசாயிகளுக்கு, உரம் வழங்கினார்.உடன், நகராட்சி ஆணையர் மற்றும் நகர் நல அலுவலர் முத்து, சுகாதார ஆய்வாளர்கள் இருந்தனர்.இது குறித்து, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறியதாவது:நத்தப்பேட்டை குப்பை கிடங்கில், ஏற்கனவே, மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அந்த உரங்கள், விருப்பம் உள்ள விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.அதேபோல், செவிலிமேடு பகுதியில், புதியதாக துவக்கப்பட்ட உரக்கிடங்கில், உரம் தயாராகிவிட்டது. தற்போது, 20 டன் உரம் இருக்கிறது.விவசாயிகள், பொதுமக்கள், எவ்வளவு வேண்டுமானாலும், இலவசமாக பெற்று செல்லலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X