பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் 'ஸ்டிரச்சர்' தள்ள ஆளில்லை; ஊழியர்கள் ஸ்டிரைக்கால் பாதிப்பு

Added : மார் 19, 2020
Share
Advertisement

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனை துப்புரவு ஊழியர்கள் 2 வது நாளாக 'ஸ்டிரைக்கில்' ஈடுபட்டதால், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கு தனியார் கான்ட்ராக்ட் அடிப்படையில் 232 துப்புரவு ஊழியர்கள், காவலர்கள், மேற்பார்வையாளர்கள் பணிபுரிகின்றனர். ஒரு மேலாளரின் கீழ் மருத்துவமனை வளாகம் முழுவதும் துப்புரவு பணி நடக்கும். இது தவிர மருத்துவமனை ஊழியர்கள் பெரும்பாலும், அலுவலக பணிகளில் ஈடுபடுவதால், அவர்கள் செய்யவேண்டிய நோயாளிகளை எக்ஸ்ரே, சி.டி., எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க என பல்வேறு பரிசோதனைகளுக்கு வீல்சேர் மற்றும் ஸ்டிரச்சரில் அழைத்து செல்லும் பணிகளையும் தனியார் துப்புரவு ஊழியர்களே செய்து வருகின்றனர்.

இது மட்டுமின்றி விபத்து, இயற்கை மரணம் நேரிடும் போது அந்த உடலை பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்லும் பணிகளையும், இவர்களே செய்கின்றனர். இது போன்று சிகிச்சை அளித்தல், மருந்து வழங்குதல், டெக்னீசியன் பணி தவிர்த்து அனைத்து பணிகளையும் தனியார் ஊழியர்களே செய்து வருகின்றனர். பாதிப்பு: இந்நிலையில், தனியார் ஒப்பந்த நிறுவனம் அரசு மருத்துவமனை துப்புரவு பணிகளில் இருந்து, ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றுவிட்டது.

மாற்றாக ஏப்., முதல் இங்கு கிரிஸ்டல் நிறுவனம் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். ஆனால், இது நாள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு பத்மாவதி நிறுவனம் பிப்., மாதத்திற்கான சம்பளத்தை தரவில்லை. மேலும், மார்ச் சம்பளமும் யார் தருவார்கள் என்ற சந்தேகம் ஊழியர்களுக்கு எழுந்துள்ளது. இதனால், சம்பளம் வழங்க கோரி நேற்று 2 வது நாளாக 'ஸ்டிரைக்கில்' ஈடுபட்டனர்.

இதனால், மருத்துவமனையில் அத்தியாவசிய பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. டீன் ரத்தினவேல், தனியார் ஊழியர்களின் சம்பள பிரச்னையை மருத்துவ கல்வி இயக்குனரிடம் தெரிவித்து, விரைந்து தீர்வு காண வலியுறுத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X