சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது கார் மோதி விபத்து இன்ஜினியரிங் மாணவர் பலி

Added : மார் 19, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அருகே நடந்த பைக் மீது கார் மோதிய விபத்தில் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் இறந்தார்.
நெல்லிக்குப்பம் அடுத்த கோண்டூர் பாபா நகரைச்சேர்ந்த முகேஷ் மகன் சித்தார்த்,21.இவர் கோயம்புத்தூரில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.தற்போது கல்லுாரிகளுக்கு விடுமுறை என்பதால் சித்தார்த் ஊருக்கு வந்துள்ளார். சித்தார்த் நேற்று முன்தினம் தனது டி.என்.07 சி.எஸ்.8285 எண்ணுள்ள பைக்கில் பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள கஸ்டம் சாலையில், நத்தப்பட்டு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே டி.என்.07 பி.எச்.4754 எண்ணுள்ள கார் வேகமாக வந்து பைக் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த சித்தார்த் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து பண்ருட்டி அக்கடவல்லியை சேர்ந்த கார் டிரைவர் பாலமுருகனை,35 கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X