பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பதிக்கு காரைக்குடி வழியாக ரயில் இயக்க வலியுறுத்தல்

Added : மார் 19, 2020
Share
Advertisement

காரைக்குடி : ராமேஸ்வரத்திலிருந்து காரைக்குடி வழியாக திருப்பதிவரை புதிய ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழில் வணிக கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில் வணிக கழகத்தினர் கூறியதாவது; திருப்பதியிலிருந்து ரேணிகுண்டா, அரக்கோணம், காட்பாடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலுார், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக புதிய ரயில் இயக்கப்பட வேண்டும். இதன் மூலம், பயணிகள் குறைந்த துாரத்திலும், குறைவான கட்டணத்திலும் பயணம் செய்ய முடியும்.

மேலும், கொல்கத்தாவிலிருந்து ஹவுரா- திருச்சி வாராந்திர விரைவு ரயிலை பல ஆண்டுகளாக காரைக்குடி வரை நீட்டிப்பு செய்திட வலியுறுத்தப்படுகிறது. திருவாரூர்--காரைக்குடி வரும் பாசஞ்சர் ரயில் மானாமதுரை வழியாக மதுரை வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ரயில்வே அமைச்சருக்கு தொழில்வணிகக் கழகம் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என தொழில்வணிகக்கழகத் தலைவர் சாமிதிராவிடமணி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X