பொது செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணிகள், முதியோர் குழந்தைகள் கோயிலுக்கு வர தடை

Added : மார் 19, 2020
Share
Advertisement

திருப்புவனம் : திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் திருவிழாவில் கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என அனைத்து தரப்பினர் கூட்டத்தில் முடிவெடுக்கபட்டது.

திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். மார்ச் 24ம் தேதி பொங்கல் வைபவம், அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்டவை நடைபெறும்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் விழாவில் தற்போது கொரோனா வைரஸ் பீதியால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டி சிறப்பு கூட்டம் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா தலைமையில் நடந்த கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் சேதுராமு, டாக்டர்கள் செல்வகுமார், ஹிந்து சமய அறநிலையத்துறை, வருவாய்துறையினர், காவல் துறையினர், திருப்புவனம் வர்த்தகர் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முடிவில் திருவிழாவில் கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும், கோயிலுக்குள் வரும் பக்தர்கள் சோப்பு போட்டு கை, கால் கழுவிய பின் வர வேண்டும், அம்மனை தரிசனம் செய்த பின் உடனடியாக கோயிலை விட்டு வெளியேற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X