போலீஸ் டைரி

Added : மார் 19, 2020
Share
Advertisement

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

உத்திரமேரூர்: உத்திரமேரூர் போலீசார், அம்மையப்பநல்லுாரில், நேற்று முன்தினம் மாலை, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், போலீசாரை பார்த்தும் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றார். வாலிபரை சுற்றி வளைத்து, போலீசார் பிடித்தனர்.விசாரணையில், வந்தவாசி தாலுகா, வெண்குன்றத்தைச் சேர்ந்த பிரவீன், 19, என்பதும், 9ம் தேதி, கோழியாளம் கிராமத்தில், சம்பத்குமார் என்ற வாலிபரிடம் மொபைல் போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்ததும் தெரிந்தது. இதையடுத்து, பிரவீனை, போலீசார் கைது செய்தனர்.

வழிப்பறி செய்த இருவர் சிக்கினர்

காஞ்சிபுரம்: மாகரல் போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர்கள், சாலவாக்கம் அடுத்த சீத்தனாஞ்சேரியைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் மற்றும் வினோத்குமார், 24, என்பதும், வழிப்பறியில் தொடர்ந்து ஈடுபட்டதும் தெரிந்தது. இருவரையும், போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

அடையாளமற்ற ஆண் இறப்பு

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம், வாயலுார் பாலாற்றங்கரை பகுதியில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார்.இது பற்றி தகவலறிந்த, சதுரங்கப்பட்டினம் போலீசார், சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விபரங்களை, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X