சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செம்பாக்கம் சாலையில் வீடுகள், கடைகள் இடிப்பு

Added : மார் 19, 2020
Share
Advertisement

திருப்போரூர்: சாலை விரிவாக்கத்திற்காக, செம்பாக்கம் நெடுஞ்சாலையில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்களை, வருவாய் துறையினர் நேற்று இடித்தனர்.

திருப்போரூர்- - செங்கல்பட்டு சாலை, இரு வழியில் இருந்து, நான்கு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக, 136 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.நெடுஞ்சாலைத் துறையினர், ஒவ்வொரு கட்டமாக நிலங்களை கையகப்படுத்தியும், ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றியும், சாலை விரிவாக்கம் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், செம்பாக்கம் கிராமத்தில், நெடுஞ்சாலை இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கான்கிரீட் கட்டுமான கடைகள், வீடுகளை, ஜே.சி.பி., இயந்திரத்தால், வருவாய் துறையினர் நேற்று இடித்தனர். மொத்தம், 15 வீடுகள், 10 கடைகள் அகற்றப்பட்டன.கடைகள் இடித்து அகற்றப்படுவதால், வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X