சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மியான்மரில் இறந்தவர் மாமல்லையில் தகனம்

Added : மார் 19, 2020
Share
Advertisement

மாமல்லபுரம்: மியான்மரில் இறந்த, மாமல்லபுரம் சிற்பக் கலைஞர் உடல், நேற்று மாமல்லபுரம் எடுத்து வரப்பட்டு, எரியூட்டப்பட்டது.

மாமல்லபுரம் அடுத்த, பெருமாளேரி, வசந்தபுரி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் தட்சிணாமூர்த்தி, 44; சுதை சிற்பக் கலைஞர்.மியான்மர் நாட்டில், கோவில் கட்டுமானத்தில், இரு மாதங்களாக ஈடுபட்டிருந்தார். கடந்த, 14ம் தேதி இரவு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார்.மாமல்லபுரத்திற்கு, உடலை எடுத்து வர முயற்சித்தபோது, 'கொரோனா' வைரஸ் பரவலால், விமானங்கள் ரத்தாகி, சிக்கலானது.இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, வருவாய் துறையினர், அந்நாட்டு யாங்கூன் அரசு மருத்துவமனை வழங்கிய இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சோதித்தனர்.

இந்நிலையில், அந்நாட்டு தமிழ்ச் சங்கத்தினர் முயன்று, நேற்று முன்தினம், 'ஏர் இந்தியா' விமானத்தில், உடலை அனுப்பினர்.மாலை, புதுடில்லி வந்து, பரிசோதனைக்கு பின், நள்ளிரவு, சென்னை விமான நிலையத்திற்கு, உடல் எடுத்து வரப்பட்டது.நேற்று, மாமல்லபுரத்தில், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி, மாலை, 4:30 மணிக்கு, சடலத்துக்கு எரியூட்டப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X