சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போர்வெல் கிணற்றில் விழுந்த ஆடு மீட்பு

Added : மார் 19, 2020
Share
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே 50 அடி ஆழமுள்ள போர்வெல் கிணற்றில் விழுந்த, ஆட்டினை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
விருத்தாசலம் அடுத்த காணாது கண்டான் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி, விவசாயி. இவர் நேற்று முன்தினம் தன்னுடைய ஆடுகளை அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அதில், ஒரு ஆடு அப்பகுதியில் இருந்த போர்வெல் கிணற்றில் தவறி விழுந்தது.இதனை அறியாத அவர் மற்ற ஆடுகளை வீட்டிற்கு ஓட்டிச் சென்றுவிட்டார். கணாமல் போன ஆட்டை தேட மீண்டும் வயல்வெளிக்கு சென்றார். அப்போது, அப்பகுதியில் இருந்த போர்வெல் கிணற்றில் இருந்து ஆடு கத்தும் சத்தம் கேட்டது, இதில் அதிர்ச்சியடைந்த அவர் விருதாசலம் தீயணைப்புத் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த விருதாச்சலம் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தமிழ் வீரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், 50 அடி ஆழ போர்வெல் கிணற்றில் சிக்கிய ஆட்டினை இரவு 8:30 மணிக்கு உயிருடன் மீட்டனர். சுர்ஜித் இறந்த சம்பவத்திற்கு பின் தமிழக அரசு போர்வெல் கிணறுகளை மூட உத்தரவிட்டது. இதனை வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மூடினர். ஆனால் காணாது கண்டான் கிராமத்தில் தனியார் நிறுவனம் மூலம், மண் பரிசோதனை செய்வதற்காக தோண்டப்பட்ட, போர்வெல் கிணறு மூடப்படாமல் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X