கொரோனாவை சீனா விரைவாக கட்டுப்படுத்தியது எப்படி

Added : மார் 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கொரோனாவை சீனா விரைவாக கட்டுப்படுத்தியது எப்படி

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவின் மத்திய நகரான வூகானில் விரைவாக பரவிய புதிய ரக கொரோனா வைரஸால் (கோவிட்-19) சீனர்கள் ஓர் அசாதாரண நிலையை அனுபவித்தார்கள். வழக்கமான நிகழ்வாகிய குடும்ப கொண்டாட்டம் நண்பர்களுடனான சந்திப்பு விருந்து உட்பட எந்த நிகழ்விலும் பங்கேற்க முடியாமல் வீட்டிற்குள் முடங்கியுள்ள அனுபவத்தை நினைத்து பார்த்தால் இந்த நொடியும் மனம் அஞ்சி நடுங்குகிறது.
இரும்புக்கரம் கொண்டு அரசு எடுத்த நடவடிக்கைகளால் நோய் தொற்று கொண்டோரின் எண்ணிக்கை மார்ச் 10க்கு பின் தற்போது வெகுவாக குறைந்து விட்டது.சீனாவில் 'கோவிட்-19' கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் உலகில் வேறு பல நாடுகளில் இதன் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. சீனாவிலுள்ள நான் நேரில் பார்த்த வைரஸ் தடுப்பு மற்றும் மீட்பு பணி அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
கொரோனா வைரஸ் தொற்றின் துவக்கத்தில் இந்த வைரஸையும் நுரையீரல் அழற்சியின் காரணத்தையும் வைரஸ் பரவும் முறையையும் பற்றி நிபுணர்களுக்கு எதுவும் தெரியவில்லை. வைரஸ் விரைவாக பரவியது. பிறகு சீன அரசு அனுப்பிய நிபுணர்கள் குழு வூகான் நகரில் களஆய்வு செய்து குறுகிய காலத்தில் வைரஸின் ரகத்தை உறுதி செய்துள்ளது.
உடனடியாக அந்த தொற்று மூலத்தை தனிமைப்படுத்தும் விதமாக ஜன. 23ல் வூகான் நகரத்தை மூட சீன அரசு உத்தரவிட்டது. வூகான் நகருக்கு மருத்துவர்கள் மருத்துவ உபகரணங்கள் முதலியவை அனுப்பபட்டன. இது வூகான் நகர் மற்றும் அது சார்ந்த கூபெய் மாகாணங்களில் மருத்துவ வசதிகளின் குறைப்பாடுகளை சமாளிக்க பெரும் உதவியாக இருந்தது.

12 ஆயிரம் பேருக்கு உடன் சிகிச்சை
நோயின் தீவிரத்தை உணர்ந்து ஆயிரம் படுக்கைகள் கொண்டுள்ள 'ஹோவ் ஷென் ஷான்' எனும் புதிய மருத்துவமனை 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. இம்மருத்துவமனைக்கான கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இணைய நேரலை மூலம் நாட்டு மக்களுக்குக் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 24 மணி நேரத்தில் 14 தற்காலிக மருத்துவமனைகள் கட்டப்பட்டன. உடன் 12,000 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
வைரஸ் தாக்கத்தின்போதும் நாட்டின் பிற பகுதியில் உள்ள அனைத்து மருத்துவர்களும் வூகான் நகரத்துக்கு பணிக்காக செல்ல தானாகவே முன்வந்தது அவர்கள் தொழில் சார்ந்த நெறிமுறையை காட்டியது. மக்கள் அவர்களாக வீட்டிலேயே தங்கினர். வெளியே போக வேண்டிய நிலையில் முகக்கவசம் அணிந்து சென்றனர். இதுபோன்ற சுகாதார நடைமுறைகளை அரசுடன் இணைந்து மக்கள் முழுமையாக கடைபிடித்தனர்.
என்ன சிகிச்சை முறை
கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேற்கத்திய மருந்துகளை தவிர சீனப் பாரம்பரிய மருத்துவம் கொண்டு வைரஸ் தொற்றியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்திய சித்த மருத்துவம் போன்று சீன மருத்துவத்திலும் தொன்மையான பல மூலிகைகள் உள்ளன. உதாரணமாக நிலவேம்பு வழக்கமாக குளிர்காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்தும். சீனாவில் 'கோவிட்-19' நோயாளிகளுக்கு தயாரிக்கப்பட்ட சீன மருந்தில் அடிக்கடி பயன்படுத்தியுள்ள மூலப்பொருள் 'பாதாமி' விதை (Prunus armeniaca Linne var.ansu Maximowicz). தடுக்கும் காலத்தில் 'அஸ்ட்ராகல்ஸ்' (As tragalus) மற்றும் மீட்புக் காலத்தில் 'போரியா' (Wolfiporia Extensa) எனும் மூலிகைகள் பயன்படுத்தப்பட்டன.
மேலும் சீன மருத்துவத்தில் 'மெரிடியன்' என்ற வகை உடற் பயிற்சிகளை (Meridian Aerobics) மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கற்பித்தனர். இதுவும் நோயை விரைவாக குணப்படுத்த உதவியது.

தடுப்பு பணியில் பொதுமக்கள்
மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதால் வைரஸ் தொற்றும் வாய்ப்பு குறையும். வைரஸ் கடுமையாக பரவிய பிறகு அரசு பல்வேறு வடிவங்களில் வைரஸின் கடுமை தடுக்கும் வழிமுறையை மக்களிடம் அறிவுறுத்தியது.ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு தெருவுக்கு ஒரு நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட்டது. அதற்குக் கீழே கமிட்டி அமைத்து அணி திரட்டல் மற்றும் வைரஸ் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது மிக முக்கியமானவை.இக்கமிட்டி ஒவ்வொரு வரையும் தனித்தனியே தொடர்பு கொண்டு சுகாதார நிலைமையை கேட்டறிந்தது. தடுப்பு வழிமுறையை கற்பித்தது. நாள்தோறும் குடியிருப்பு பகுதியில் மூன்று முறை கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டன. பாதிப்புக்குள்ளானவர் என்று சந்தேகத்திற்கு உரிய நபர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தியது தொடர்பான பணிகளை அர்ப்பணிப்புடன் செய்தன.உதாரணமாக நோய் தொற்று பாதித்தோருக்கு தேவையான உணவுகளையும் அன்றாட பொருட்களையும் வாங்கி இக்குழு அனுப்பி சுகாதார நிலைமையை நாள்தோறும் கேட்டு அதை பதிவும் செய்து வந்தது. மக்கள் எல்லோரும் தானாகவே வீட்டில் தங்கினர்.

குறிப்பாக புத்தாண்டு பழக்கங்களாக நண்பர்கள் வீட்டில் சேர்ந்து சாப்பிடுவது கூட்டங்களில் கலந்து கொள்வது போன்ற மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை முழுவதும் கைவிட்டனர். வெளியே போகும் போது தவறாமல் முகக்கவசம் அணிந்தனர். வரிசையில் காத்திருந்த போது ஒருவரிடமிருந்து ஒருவர் ஒரு மீட்டர் துாரம் இடைவெளி விட்டனர்.தடுப்புப்பணியில் தொழில்நுட்பம்சமீபமாக சீனாவில் இணைய தொழில்நுட்பம் விரைவாக வளர்ந்து வருகிறது. இது வைரஸ் தடுப்புப் பணியிலும் பெரும் பங்களிப்பு செய்தது. உதாரணமாக வீட்டில் தங்கியிருக்கும் மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அன்றாட பொருட்களை எளிதாக இணையத் தளத்தில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்பொருட்கள் தினமும் குடியிருப்பு பகுதியின் வாசலிலுள்ள சரக்கு சேமிப்பிடத்தில் அனுப்பப்படும். அங்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்குக் கொண்டு போகலாம். கை கொடுத்த பிரத்யேக 'ஆப்'பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அலைபேசி 'ஆப்' மூலமும் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் புதுமையான வழி கண்டுபடிக்கப்பட்டது.
முதலில் அந்த 'ஆப்'ல் தங்கள் பெயர் தொடர்பு எண் சமீபத்தில் பயணம் செய்த இடங்கள் சுகாதார நிலைமை முதலிய தகவல் நிரப்பி பதிவு செய்யவேண்டும்.பிறகு ஒரு 'கியூ.ஆர்.' கோடு கிடைக்கும். குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் போது அல்லது வாடகை காரைப் பயன்படுத்தும் போது அந்த 'கியூ.ஆர்.' கோடு காட்டி 'ஸ்கேன்' செய்ய வேண்டும். இதன் மூலம் அதில் நுழைந்தவர்களில் யாருக்காவது தொற்று இருந்தால் உறுதி செய்யப்பட்டு அவர்களை எளிதில் கண்டுபிடித்தனர்.மேலும் பெரிய தரவுகளின் மூலம் அருகில் எத்தனை பேர் தொற்றியவர்களாக இருந்தனர் தாம் தங்கும் இடத்திலிருந்து எவ்வளவு துாரம் அவர்கள் இருந்தனர் என்பதை உணர்ந்தனர். மின் வணிக வளர்ச்சியால் சீன மக்களுக்கு wechat அல்லது Alipay எனும் ஆப் மூலம் இணையத்தில் பணம் பரிமாற்றம் செய்தனர். பணத்தை தொட்டு நோய் தொற்றும் வாய்ப்பை இந்த நடவடிக்கைகள் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் போராட்டத்தின் மூலம் உலக மக்களின் உயிர் மற்றும் எதிர்காலம் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்திருப்பதை அறிய முடிகிறது. எந்த நெருக்கடி ஏற்பட்டாலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒற்றுமையாய் சமாளிக்க வேண்டும் என்பதை உலகிற்கு எடுத்து சொல்லியுள்ளது.இந்த வகையில் பல நாடுகளிலிருந்து உதவி பெற்றுள்ள சீனா கைமாறாக விமானங்கள் மூலம் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வருகிறது.மக்களை உருக்குலைத்து அசுர வேட்டையாடும் கொரோனாவை கட்டுப்படுத்திய சீனாவின் அனுபவம் பல நாடுகளுக்கு பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழை நேசிக்கும் ஒரு தமிழ் பேராசிரியையாக தமிழர்களுக்கு இதை பகிர்வதை என் கடமையாக கருதுகிறேன்.
அவசர நிலை ரத்து
ஜப்பானின் வடக்கில் அமைந்துள்ள தீவு ஹொக்கைடோ. இங்கு 'கொரோனா' வைரசின் பாதிப்பு அதிகமானதால் கடந்த மாதம் 28ம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிலையில் பாதிப்பு குறைந்துள்ளதால் அவசர நிலையை கவர்னர் நவோமிச்சி சுசூகி ரத்து செய்துள்ளார்.வெளிநாட்டினருக்கு தடை
இஸ்ரேலில் 'கொரோனா' வைரசால் 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டிற்குள் வெளிநாட்டினர் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 'இஸ்ரேல் மக்களைத் தவிர வேறு யாருக்கும் உள்ளே நுழைய அனுமதி இல்லை' என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடிகைக்கு 'கொரோனா'
பிரபல தொலைக்காட்சித் தொடரான 'கேம் ஆப் த்ரோன்சில்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் இந்திரா வர்மா 46. இவர் சமீபத்தில் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டபோது கொரோனா பாதிப்பு உள்ளது உறுதிபடுத்தப்பட்டது. இதை சமூக வலைதளமான 'இன்ஸ்டாகிராம்' மூலம் நேற்று முன்தினம் அவர் தெரிவித்தார்.



6 -10 வாரங்களில் சீரடையும்'கொரோனா' வைரசை எதிர்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றவேண்டும். வைரஸ் குறித்த பரிசோதனைகளை செய்தும் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தவும் வேண்டும். அதை செய்யும் நாடுகளின் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் அடுத்த 6-10 வாரங்களில் சீரடையும்.பில் கேட்ஸ், நிறுவனர் மைக்ரோசாப்ட் மனித குலத்திற்கு எதிரிமுன் எப்போதும் இல்லாத அச்சுறுத்தலை தற்போது கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. மனிதகுலத்திற்கு எதிரியாக உள்ள இந்த வைரசை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளவேண்டும்கெப்ரேயெசஸ் டெட்ரோஸ்பொது இயக்குனர், உலக சுகாதார அமைப்பு



அவசர நிலை பிரகடனம்
'கொரோனா' வைரசால் ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் இதுவரை 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வைரஸ் பரவலை தடுக்க அதிபர் மார்செலோ ரெபெலோ நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் அடுத்த 15 நாட்கள் இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ரோபோக்கள்' பரிசோதனை
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் 'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக நோயாளிகளின் காய்ச்சல் இருமலை பரிசோதிக்க மருத்துவமனைகளில் 'ரோபோக்களை' நிறுவும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் மருத்துவ ஊழியர்களின் பணிச்சுமை குறையும் என கருதப்படுகிறது.



Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
26-மார்-202008:57:37 IST Report Abuse
Pannadai Pandian சீனாவில் டென்சிட்டி ஆப் பாபுலேஷன் (Density of population ) இந்தியாவை விட மூன்று மடங்கு குறைவு. அதனால் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. சீனாவில் எதுவும் சாத்தியம்.....அரசு சொல்வதை சற்றும் அலச்சிய படுத்தாமல் பின் பற்றுவதற்கு மக்களை தயார் நிலையில் சுமார் 60 வருடங்களாக வைத்துள்ளனர்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
20-மார்-202011:49:46 IST Report Abuse
Nallavan Nallavan அங்கும் மக்கள் தொகை அதிகமே... ஒருவேளை, மக்கள் தொகை ஒரு பொருட்டே இல்லையா? இருந்தாலும் இந்திய மக்களிடத்தில் அவேர்னஸ் உருவாக்கியதில் இந்திய அரசு சோடைபோகவில்லை .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X