பொது செய்தி

தமிழ்நாடு

புற்றுநோய் கண்டறியும் முகாம்

Added : மார் 19, 2020
Share
Advertisement
 புற்றுநோய் கண்டறியும்  முகாம்

கடலுார்:உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மகாத்மாகாந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், பெண்களுக்கு மார்பக புற்று நோயை கண்டறிந்து பொதுஅறுவை சிகிச்சை, மற்றும் ஆலோசனை வழங்கும் முகாம் நடந்தது.
புதுச்சேரி அரங்கனூர் கிராம சுகாதாரப் பயிற்சி நிலையத்தில் நடந்த முகாமில் திருச்சி மருத்துவர் சாந்தா மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் நிறுவனத்திலிருந்து வருகை புரிந்த மருத்துவக் குழுவினர் 31 தாய்மார்களுக்கு புற்று நோய் கண்டறியும் பரிசோதனை செய்தனர்.நிகழ்ச்சிக்கு துணை கண்காணிப்பாளர் சுவாதிஜெயண்த்பவார் தலைமை தாங்கினார். பெண்களுக்கான புற்று நோய் கண்டறியும் சோதனையில் உதவி பேராசிரியர் இந்திராணி தலைமையில் மருத்துவக் குழுவினர் ஈடுபட்டனர்.
அதில், 40 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட தாய்மார்களுக்கு மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரியில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர் விந்தியா மற்றும் மருத்துவ மேற்படிப்பு மற்றும் பயிற்சி மருத்துவர்கள், சுகாதாரக் கல்வியாளர், மருத்துவ சமூக நலப்பணியாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்நிறுவனம் சார்பில், கடலுார் சிப்காட் சோலார் தொழிற்சாலையில் பெண்களுக்கு மார்பக புற்று நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X