சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காணாமல் போன மாணவி மீட்பு

Added : மார் 19, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அருகே காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் பழனியில் இருந்து மீட்டனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரை சேர்ந்தவர் 23 வயது கல்லுாரி மாணவி. இவர் சிதம்பரம் அண்ணாமலைபல்கலைக் கழகத்தில் படித்து வந்தார். தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 7 ஆம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து அதன் விபரத்தை தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தெரிவித்து இருந்தனர்.பழனியில் தனியாக சுற்றிக் கொண்டிருந்த மாணவியை பழனி போலீசார் அழைத்து சென்று விசாரித்த போது, பெற்றோரிடம் சண்டை போட்டுக் கொண்டு வந்து விட்டதாக கூறியுள்ளார். உடன் பழனி போலீசார் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.நெல்லிக்குப்பம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் பழனிக்கு சென்று மாணவியை அழைத்து வந்து எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X