சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் இரட்டைக்கொலையில் கூலிப்படையை சேர்ந்த ஒருவர் கைது

Added : மார் 19, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வெடி குண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கூலிப்படையை சேர்ந்தவரை துாத்துக்குடி போலீசார்கைது செய்தனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2018 ல் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வெளியே வந்த வாலாந்தரவையை சேர்ந்த கார்த்திக் 36, ராமநாதபுரம் கறிவேப்பிலைக்காரத்தெரு விக்னேஷ்வரன் 27, ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் வெடி குண்டு வீசி வெட்டிக் கொலை செய்தனர்.கார்த்திக் அண்ணன் தர்மராஜ் புகாரில் கேணிக்கரை போலீசார் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். 5 பேரை தேடி வந்தனர்.

சம்பவம் நடந்து 15 மாதங்களுக்கு பின் நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியை சேர்ந்த அதிசயபாண்டியன் 47, என்பவரை துாத்துக்குடி மாவட்ட போலீசார் கடந்த மாதம் கைது செய்து குண்டர் சட்டத்தில் வேலுார் சிறையில் அடைத்தனர்.

இவரை போலீஸ் காவலில் எடுத்து ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை ராமநாதபுரம் போலீசார் தேடி வந்தனர். துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முடுக்கலான்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த பெருமாள்சாமி என்ற பெருமாள்பாண்டி 30, என்பவர் தான் வெடி குண்டு வீசிய வழக்கின் முக்கிய குற்றவாளி என்பதால் இவரை தேடி வந்தனர்.

துாத்துக்குடியில் இருந்து நெல்லை ரோட்டில் தாமிரபரணி ஆற்றுப்பாலம் பகுதியில் பக்கபட்டியை சேர்ந்த இசக்கிப்பாண்டி 24, என்பவரை கொலை செய்த வழக்கில் இவரை முறப்பநாடு போலீசார் தேடி வந்தனர். இவரை துாத்துக்குடி போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர். இவரையும் போலீஸ் காவலில் விசாரிக்க ராமநாதபுரம் போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X