பொது செய்தி

இந்தியா

செய்தி துளிகள்..

Added : மார் 19, 2020
Share
Advertisement

ஸ்ரீநகரில் நுழைந்த 4 வெளிநாட்டு பயணியர்

ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 60 வயது பெண்மணிக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் ஜம்மு - காஷ்மீரில் 144வது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெளிநாட்டு பயணியர் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தடையை மீறி இத்தாலியைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு வெளிநாட்டினர் ஸ்ரீநகருக்குள் நுழைந்துள்ளனர். அந்த நால்வரையும் போலீசார் பிடித்து பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பினர்.

முதியவர் மரணம்

ஜெர்மனியில் இருந்து இத்தாலி வழியாக பஞ்சாப் வந்த 72 வயது முதியவர் ஒருவர் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று மரணம் அடைந்தார். முதியவர் இறந்த பின் வந்த ரத்த பரிசோதனை அறிக்கையில் 'கொரோனா' வைரஸ் பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 'முதியவர் இறப்பிற்கு கொரோனாதான் காரணமா என தெரியவில்லை' என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தப்பிச்சென்றவர் பிடிபட்டார்

அசாமைச் சேர்ந்த ஒருவர் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அங்கு துபாயில் இருந்து வந்த ஒருவர் உணவு சாப்பிட்டுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது பிறகு தெரியவந்தது. இதையடுத்து உணவக ஊழியர்கள் அனைவரையும் வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால் அதில் மூன்று பேர் தப்பிச் சென்றுள்ளனர். அதில் ஒருவர் மேற்கு வங்கம் சென்று அங்கிருந்து அசாமிற்கு ரயிலேறியுள்ளார். இது தெரியவந்ததும் போன்கைகான் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அந்த நபரை பிடித்து தனியிடத்தில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொழிலாளர் போர்க்கொடி

மும்பையில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா பாதித்த மூவரும் கண்காணிப்பில் நான்கு பேரும் தனி அறைகளில் உள்ளனர். அவர்களின் ஆடைகள் படுக்கை மற்றும் தலையணை விரிப்புகள் போர்வைகள் அறையின் திரைச் சீலைகள் ஆகியவற்றை துவைக்க அம்மருத்துவமனை சலவைத் தொழிலாளர்கள் மறுத்துள்ளனர். தங்களுக்கும் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற அச்சம் தான் இதற்கு காரணம்.

'டப்பாவாலா' சேவை நிறுத்தம்

மும்பையில் அலுவலர்கள் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மதிய உணவு வினியோக சேவையில் 'டப்பாவாலா' எனப்படுவோர் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவால் மதிய உணவு விநியோக சேவையை மார்ச் 31ம் தேதி வரை நிறுத்துவதாக டப்பாவாலாக்கள் அறிவித்துள்ளனர்.
ஏர் இந்தியா இன்டிகோ ஊதிய குறைப்பு

கடும் நிதி நெருக்கடியில் உள்ள ஏர் இந்தியா நிறுவனம் 'கொரோனா'வால் சர்வதேச விமான சேவைகளை பெருமளவு குறைத்து விட்டது. இதனால் கடுமையான வருவாய் இழப்பை சந்தித்துள்ள இந்நிறுவனம் இழப்பை சமாளிக்க ஊழியர்களின் ஊதியத்தில் 5 சதவீதத்தை குறைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

ஆனால் இன்டிகோ நிறுவனம் ஊழியர்களின் ஊதியத்தை பதவிக்கு ஏற்ப 5-20 சதவீதம் வரை குறைத்துள்ளது. ''நிறுவனத்திற்கு தலைமை தாங்குவதால் என் ஊதியத்தில் அதிகபட்சமாக 25 சதவீதம் குறைத்துக் கொள்கிறேன்'' என இன்டிகோ தலைமை செயல் அதிகாரி ரோனோஜாய் தத்தா அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்நிறுவனத்தின் ஊதியக் குறைப்பு ஏப்.1ல் அமலுக்கு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X