பொது செய்தி

தமிழ்நாடு

பாழடைந்த கட்டடத்தை இடிக்க கோரிக்கை

Added : மார் 19, 2020
Share
Advertisement

முதுகுளத்துார் : முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆபத்தான பாழடைந்த பழைய கட்டடத்தை இடிக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 50 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடத்தில் இயங்கி வந்தது. காலப்போக்கில் அவ்வப்போது மராமத்து பணி செய்யப்பட்டு வந்த நிலையில் கட்டடம் சேதமடைந்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.அலுவலக வளாகத்தில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம், சார்நிலை கருவூலம், குழந்தை நல அலுவலகம் உள்ளது.

இங்கு முதுகுளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட 48 கிராம ஊராட்சிகளில் இருந்து பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள், அலுவலர்கள் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் ஆபத்தை உணராமல் பாழடைந்த கட்டடத்தின் அருகே காத்திருக்கின்றனர். பழைய கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு கட்டடத்தை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X