சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

ஜெ., இல்லாததால் அமைச்சருக்கு தைரியம்

Added : மார் 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜெ., இல்லாததால் அமைச்சருக்கு தைரியம்

ஜெ., இல்லாததால் அமைச்சருக்கு தைரியம்

விருதுநகரில், சமீபத்தில் நடந்த அரசு விழாவில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சியில், கூட்டுறவு சங்கம் சிதைக்கப்பட்டது. 2011ல், முதல்வராக இருந்த ஜெயலலிதா, கூட்டுறவுத் துறையை, என்னிடம் கொடுக்கும்போது, 'இது ஏழை, எளிய மக்களுக்கான துறை; உன்னை நம்பி தருகிறேன்' என்றார். கூட்டுறவுத் துறையில், 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தது, நான் மட்டும் தான்,' என்றார்.கூட்டத்தில் இருந்த, கட்சியின் மூத்த உறுப்பினர், 'ஜெ., உயிரோடு இருக்கும்போது, 'தெர்மக்கோல்' காமெடி நடத்தியிருந்தா, இவரு காணாம போயிருப்பார்... இப்போ, ஜெ., இல்லை; அதனால, தைரியமாக பேசுறாரு' என்றார்.அருகிலிருந்தவர், 'விஞ்ஞானிகளை எல்லாம், ஜெ., மறைச்சு வச்சிருந்தாங்களா...' என, குசும்புடன் கேட்க, சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
20-மார்-202007:15:01 IST Report Abuse
raja ஆணவம் மிக்கவர்கள் பொது வாழ்வில் இருந்து ஒழிவதே நல்லது.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-மார்-202006:06:49 IST Report Abuse
D.Ambujavalli இவர் மட்டுமா? இவரின் அமைச்சரவை சகாக்கள் எல்லாருமே அறிவுக் கொழுந்துகள் ஆகி தங்கள் ஞானத்தை உலகறியத் தம்பட்டம் அடிக்கிறார்கள். ஜெயின் ஆத்மா ‘இருக்குமிடத்திலிருந்தே ‘ தலையில் அடித்துக்கொள்ளும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X