பொது செய்தி

தமிழ்நாடு

1120 சதுரடி இடம் தான் பிரச்னை! வேளச்சேரி - ஆதம்பாக்கம் இடையே ரயில் ஓடுமா?

Added : மார் 19, 2020
Share
Advertisement
 1120 சதுரடி இடம் தான் பிரச்னை!  வேளச்சேரி - ஆதம்பாக்கம் இடையே ரயில் ஓடுமா?

சென்னை: வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் திட்டத்தில், ஆதம்பாக்கம் வரை ரயில்கள் இயக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆதம்பாக்கம் ரயில் நிலைய பணியை முடிக்க, 1,120 சதுர அடி இடம் பிரச்னையாக இருப்பதால், இதற்கு, நெடுஞ்சாலைத்துறை தீர்வு காண வேண்டும் என, ரயில்வே அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னையின் போக்கு வரத்து நெரிசலை குறைக்க, கடற்கரையில் இருந்து, வேளச்சேரி வழியாக, பரங்கிமலை வரை மேம்பால ரயில் விட திட்டமிடப்பட்டது.இழுபறிகடற்கரை - மயிலாப்பூர் இடையே, 266 கோடி ரூபாயில் நடந்த மேம்பால ரயில் பணி, 1997ல் முடிந்தது. இரண்டாம் கட்டமாக, மயிலாப்பூர் - வேளச்சேரி இடையே, 877 கோடி ரூபாயில் நடந்த பணி, 2007ல் முடிந்தது. கடற்கரை - வேளச்சேரி இடையே, ரயில் போக்குவரத்து தொடர்கிறது.இதை, பரங்கிமலை வரை நீட்டிக்கும் பணி, 495 கோடி ரூபாயில், 2008ல் துவங்கியது. மொத்தமுள்ள, 5 கி.மீ., துாரத்தில், 4.5 கி.மீ., துாரம் பணி முடிந்தது. இடையில், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் என, இரு ரயில் நிலையங்கள் கட்டும் பணி வேகமாக நடக்கிறது.தில்லை கங்கா நகர் பகுதியில், இத்திட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தை நாடியதால், அரை கி.மீ., துாரத்திற்கு பணி நடைபெறவில்லை.

இதனால், 2010ல் முடிக்க வேண்டிய பணி, இழுபறியில் செல்கிறது.மேலும், 450 கோடியாக இருந்த திட்ட மதிப்பீடு, 900 கோடியாக உயர்ந்துள்ளது. நிலம் கையகப்படுத்த வேண்டிய பணி முடிந்தால் தான், அரை கி.மீ., துார பணியை முடிக்க முடியும். இதற்கு, மாதங்கள் பல ஆகும் என தெரிகிறது.அதுவரை காத்திருக்காமல், வேளச்சேரி - ஆதம்பாக்கம் இடையே ரயில்கள் இயக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, தண்டவாளம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.ஆதம்பாக்கம், ரயில் நிலையத்தில், நடைமேடை அமைக்கும் பணி நிலுவையில் உள்ளது.

இந்த பணி முடிந்தால், ரயில் சோதனை ஓட்டம் நடத்த, நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.ஆலந்துார் - வேளச்சேரி, 100 அடி அகல உள்வட்ட சாலையில், ஆதம்பாக்கம் மேம்பால ரயில் நிலையம் அமைகிறது. எதிர்ப்புநெடுஞ்சாலைத்துறை சார்பில், உள்வட்ட சாலைக்கு, 2009ல், நிலம் கையகப்படுத்தும் போது, ஆதம்பாக்கம் கிராமம், 24/1- ஏ' சர்வே எண்ணில், 1,120 சதுர அடி இடத்தை, நில உரிமையாளரிடம் இருந்து, முறையாக பெறவில்லை.இந்த இடத்தின் மேல், ரயில்வே நடைமேடை அமைகிறது.

இதற்காக, 50 அடி உயரத்தில், குறுக்கே துாண்கள் அமைக்க, நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவிப்பதால், நடைமேடை அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த இடப்பிரச்னை முடிந்தால் தான், ஆதம்பாக்கம் வரை ரயில்கள் இயக்க முடியும். இதற்கு, இடையூறாக உள்ள இடப்பிரச்னைக்கு, நெடுஞ்சாலைத்துறை தீர்வு காண வேண்டும் என, ரயில்வே அதிகாரிகள் கோரிக்கை வைத்துஉள்ளனர்.தில்லைகங்கா நகர் பகுதி இடப்பிரச்னை, நீதிமன்றத்தில் இருப்பதால், முழு திட்டத்தை செயல்படுத்த நாட்கள் பல ஆகும். அதுவரை காத்திருக்காமல், ஆதம்பாக்கம் வரை ரயில்கள் இயக்க முடிவு செய்துள்ளோம்.

இதற்கு, 1,120 சதுர அடி சாலை இடம் பிரச்னையாக உள்ளது. உள்வட்ட சாலையில், ரயில் நிலையம் அமைவதால், இடப்பிரச்னைக்கு நெடுஞ்சாலைத்துறை தான் தீர்வு காண வேண்டும். கடிதம் எழுதி உள்ளோம். விரைவில், நல்ல முடிவு எட்டும் என எதிர்பார்க்கிறோம்.ரயில்வே அதிகாரிகள்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் போது இருந்த அதிகாரிகளிடம், ஏன் விடுபட்டது என விபரம் கேட்டுள்ளோம். நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டி இருந்தால், உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ரயில்வே நிர்வாகமும் கோரிக்கை வைத்துள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X